சேமிப்பானது எளியதும் வசதியானதுமாகும். அத்துடன் அது உண்மையில் பலனளிக்கும்

டயலொக் பினான்ஸின் நம்பகமான மற்றும் சிறந்த அம்சங்கள் நிறைந்த சேமிப்புக் கணக்கைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் எளிதாகவும் வசதியாகவும் சேமிக்கலாம். இந்த புதிய மற்றும் புதுமையான தயாரிப்பு பாரம்பரிய சேமிப்பு முறையை விட மாறுபட்டது. டிஜிட்டல் சேமிப்பு கணக்கு உங்களுக்கு நிதியை அணுகவும் மற்றும் எந்த நேரத்திலும் உங்கள் மொபைல் தொலைபேசியிலிருந்து நேரடியாக பரிவர்த்தனை செய்யவும் உதவுகிறது.

உங்கள் டயலொக் பினான்ஸ் சேமிப்புக் கணக்கில் நீங்கள் எதைப் பெறுவீர்கள்?
பயன்பாட்டு கொடுப்பனவுகளுக்கு கட்டணம் அறிவிடப்படாது
உடனடி மற்றும் காகிதமற்றது
4.5% வட்டி விகிதம்
எப்போதும் சேவையை பெறலாம்

Check your transactions
உங்கள் Genie செயலிற்குள் பிரவேசித்து உங்கள் கொடுக்கல் வாங்கல்களை பரிசோதனை செய்வது இலகுவானது. உங்கள் பணம் செலுத்தப்பட்டதா? அல்லது வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உடனடியாக சரிபார்த்து கொள்ள முடியும்.

Transfer and receive funds without delays
ஒரு சில பொத்தான்களைத் தட்டுவதன் மூலம் பணத்தை உடனடியாக மற்றும் சிரமமின்றி யாருக்கும் மாற்ற முடியும். உங்கள் eZ cash பண கணக்கை நிரப்ப அல்லது சேமிப்பு கணக்கிற்கு பணத்தை சேர்ப்பதற்கு Just Pay ஊடாக முற்றிலும் இலவசம்.

Easy cash withdrawals
நாடு முழுவதும் உள்ள லங்காபே ஏடிஎம்களில், உங்கள் ஏடிஎம் கார்ட ஊடாக விரைவாகவும் எளிதாகவும் பணம் எடுக்க முடியும்.

Hassle-free bill payments
உங்கள் கட்டணங்களை செலுத்துவது பற்றி இனி கவலைப்பட தேவையில்லை. டயலொக் பினான்ஸின் கட்டண கொடுப்பனவு வசதிகளுடன் நீங்கள் இலகுவாக எந்தவொரு கட்டணத்தையும் எப்போதும் செலுத்த முடியும்.

Safe and secure banking
உங்கள் சேமிப்பு கணக்கானது, டயலொக் பினான்ஸ் உடன் பாதுகாப்பானது மற்றும் இரகசியமானது. ஏனெனில் உங்கள் நிதி மற்றும் மதிப்புமிக்க தரவுகளுக்கு எந்த தீங்கும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்பாக வைத்திருக்க உலகளாவிய சிறந்த நடைமுறைக்கு ஏற்ப சிறந்த தரமான பாதுகாப்பு தீர்வுகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். உங்கள் கணக்குகள் மற்றும் நிதியை நீங்கள் மட்டுமே அணுக முடியும்.

Banking on the move
உங்கள் கொடுப்பனவுகளை செலுத்த, பரிமாற்றங்களை செய்ய, உங்கள் மிகுதியை எங்கிருந்தாலும் அறிந்துகொண்ட வாரத்தின் ஏழு நாட்களிலும் 24 மணித்தியாலமும் உங்கள் கையடக்க தொலைபேசி ஊடாக அணுகலாம்.

Open your account today
உங்கள் புதிய சேமிப்புக் கணக்கைத் திறப்பதற்கு Genie செயலியை தரவிறக்கம் செய்ய மற்றும் உங்கள் தகவல்களை வழங்குவது மிக இலகுவானது. வரிசையில் நிற்கவோ அல்லது அதிக ஆவணங்களோ தேவையில்லை. உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணித்தியாலயம் எமது அழைப்பு இலக்கமான 0777370370 அழைக்கவும்.

*Eligible deposit liabilities are insured with the Sri Lanka Deposit Insurance Scheme implemented by the Monetary Board for compensation up to a maximum of Rs. 1,100,000 per depositor.

Genie அப் டவுன்லோட் செய்க
Product Interest Rate
Individual Savings 5%
Corporate Savings -Rs.25,000/- & above deposit value 4%
Corporate Savings -below Rs.25,000/- deposit value 3.5%
Minor Savings Accounts 5%
Savings Accounts for Touch Fuel 2%
Investment Plan | Adult 6.5%

சேமிப்பு தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இது ஒரு புத்தாக்கமான டிஜிட்டல் சேமிப்பு தயாரிப்பாகும். இது உங்கள் மொபைல் போனில் இருந்து எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் வாரத்தின் 7 நாட்களிலும் 24 மணித்தியாலயமும் பணத்தை நேரடியாக அணுக உங்களுக்கு அனுமதி வழங்குகின்றது.

18 வயதிற்கு மேற்பட்ட ( இலங்கை பிரஜைகள் மட்டும்) இந்த சேமிப்பு கணக்கை ஆரம்பிக்கலாம்

 • கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரிலிருந்து Genie செயலியைப் பதிவிறக்கி பதிவு செய்யவும்.
 • 'சேமிப்புக் கணக்கை ஆரம்பிக்கவும்' என்பதைக் கிளிக் செய்து> வழிமுறைகளைப் பின்பற்றவும்

 • செல்லுபடியான ஆவண அத்தாட்சி (தேசிய அடையாள அட்டை / கடவுச்சீட்டு / சாரதி அனுமதிப்பத்திரம்)
 • சமர்ப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டு சான்றிலிருந்து தபால் முகவரி வேறுபட்டிருந்தால், 3 மாதங்களுக்கு மேற்படாத ஏதாவது கட்டண சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும்
  • சாரதி அனுமதிப்பத்திரம்
  • பயன்பாட்டு ஆவணம் (மொபைல் பில் தவிர)
  • வங்கி அறிக்கை / புத்தகம்
  • ஒரு பொது அதிகாரியிடமிருந்து கடிதம்
  • குத்தகை ஒப்பந்தம்
  • வருமான வரி ரசீது / மதிப்பீட்டு அறிக்கை

சேமிப்புக் கணக்கு நிலுவையின் கீழ் 'பணத்தை சேர்' என்பதை பயன்படுத்தி, உங்கள் பிற வங்கிக் கணக்குகளிலிருந்து ஜஸ்ட் பே தேர்வு மூலம் பணத்தை எடுக்கலாம்.

Genie செயலியில் நுழைந்து சேமிப்புக் கணக்கு தகவல் பக்கத்தைப் பார்க்கவும்

 • Just Pay ஊடாக மற்ற வங்கிகளில் இருந்து பணத்தை பெறுதல்
 • சேமிப்புக் கணக்கு ஊடாக கட்டணங்களை செலுத்துதல்
 • ஏடிஎம் கார்ட் கோரிக்கை மற்றும் முகாமைத்துவம்
 • சேமிப்பு கணக்கு மூலம் QR /OTC கொடுப்பனவுகள்
 • டயலொக் பினான்ஸ் கணக்கிற்கு அல்லது வேறு வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றுதல்
 • உங்கள் கணக்கு பரிமாற்ற வரலாற்றை பார்க்க
 • தற்போதுள்ள வாடிக்கையாளுக்கு தமது சேமிப்புக் கணக்குகளை இணைத்து Genie செயலியில் அனுகூலங்களை பெறலாம்

டயலொக் பினான்ஸ் சேமிப்பு கணக்கொன்றை ஆரம்பிக்க குறைந்தபட்ச வைப்பு தொகை இல்லை

 • ATM ஊடாக ரூ.50,000/- மீளப்பெறலாம்
 • ஏனைய வங்கிகளுக்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.250,000/-
 • டயலொக் பினான்ஸிருந்து டயலொக் பினான்ஸ் இற்கு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1,000,000/-

இல்லை ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் உங்களுக்கு இலத்திரனியில் அறிக்கை அனுப்பப்படும்

ஆம் வாடிக்கையாளர்கள் சான்றளிக்கப்பட்ட நகலைப் பெறுவதற்கு, டயலொக் பினான்ஸ் கிளைக்கு செல்ல வேண்டும்.

நீங்கள் 4.00% வருடாந்த வட்டி விகிதத்திற்கு தகுதிபெறுவீர்கள். ( ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் அல்லது நிறுவனத்தின் முடிவுகளின் காரணமாக தேவைப்படும் போது வட்டி விகிதங்களை மாற்ற நிறுவனத்திற்கு உரிமை உண்டு)

வைப்பு செய்த திகதியிலிருந்து

நாளாந்த இருப்பு அடிப்படையில் வட்டி கணக்கிடப்படுகிறது. இந்த வட்டி ஒவ்வொரு மாதமும் 25 ஆம் திகதி வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

 • அனைத்து வெளி CEFT பரிமாற்றத்திற்கு ரூ.20/- அறவிடப்படும்
 • ஏடிஎம் தொடர்பான கட்டணங்கள் 2021 ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரும்
 • அனைத்து பில் கட்டணங்களும் இலவசம்

தற்போது குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லை

தற்போதைக்கு இல்லை. டயலொக் பினான்ஸ் தனிப்பட்ட சேமிப்பு கணக்கொன்றை மட்டுமே தற்போது உங்களால் ஆரம்பிக்க முடியும்

 • ஏனைய வங்கிகளின் ATM ஊடாக பணம் எடுக்கும்போது> ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.25/-
 • மிகுதியை அறிந்துகொள்ள ரூ.7.50

 • சேமிப்பு கணக்கை ஆரம்பிக்கவும் என்பதை கிளிக் செய்க
 • ATM அட்டையை பெறுக என்பதை கிளிக் செய்க
 • எனக்கு டயலொக் பினான்ஸ் ATM அட்டை தேவை என்பதை தெரிவுசெய்க
 • நீங்கள் எவ்வாறு ஏடிஎம் கார்டை பெற விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யவும்

 • சேமிப்பு கணக்கை ஆரம்பிக்கவும் என்பதை கிளிக் செய்க
 • ATM அட்டையை பெறுக என்பதை கிளிக் செய்க
 • என்னிடம் ஏற்கனவே டயலொக் பினான்ஸ் ATM அட்டை உள்ளது என்பதை தெரிவுசெய்க
 • 19 இலக்கம் கொண்ட உங்கள் ATM இலக்கத்தை உட்புகுத்தவும்
 • OTP (ஒரு முறை மட்டும் கிடைக்கும் கடவுச்சொல் உறுதிப்படுத்துங்கள்
 • உங்கள் சேமிப்பு கணக்கை உறுதிப்படுத்துக

 • சேமிப்பு கணக்கை ஆரம்பிக்கவும் என்பதை கிளிக் செய்க
 • ஏடிஎம் கார்டை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்
 • PIN இலக்கத்தை திரும்ப அமைக்க' என்பதை தேர்வு செய்க
 • OTP ஐ உறுதிப்படுத்துங்கள்
 • நான்கு இலக்கம் கொண்ட புதிய PIN ஐ உருவாக்கவும்

 • சேமிப்பு கணக்கை ஆரம்பிக்கவும் என்பதை கிளிக் செய்க
 • ஏடிஎம் கார்டை நிர்வகி' என்பதைக் கிளிக் செய்யவும்
 • "தற்காலிகமாக கார்டை தடை செய்யவும்' என்பதை தேர்வு செய்க
 • OTP ஐ உறுதிப்படுத்துங்கள்

 • சேமிப்பு கணக்கை ஆரம்பிக்கவும் என்பதை கிளிக் செய்க
 • உங்கள் அட்டையைப் பயன்படுத்த தடையை நீக்கு' என்பதைக் கிளிக் செய்யவும்
 • OTP ஐ உறுதிப்படுத்துங்கள்

 • சேமிப்பு கணக்கை ஆரம்பிக்கவும் என்பதை கிளிக் செய்க
 • ஏடிஎம் கார்டை நிர்வகி' என்பதைக் கிளிக் செய்யவும்
 • புதிய கார்ட் தேவை என்பதை கிளிக் செய்க
 • எனது கார்ட் சேதமடைந்துவிட்டது என்பதை தெரிவு செய்க
 • OTP ஐ உறுதிப்படுத்துங்கள்
 • ATM அட்டை தேவை என்பதை கிளிக் செய்க
 • ATM அட்டையை நீங்கள் எவ்வாறு பெற விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யவும்

 • சேமிப்பு கணக்கை ஆரம்பிக்கவும் என்பதை கிளிக் செய்க
 • ஏடிஎம் கார்டை நிர்வகி என்பதைக் கிளிக் செய்யவும்
 • தொலைந்த / காணாமல்போன அட்டை தொடர்பாக முறையிட கிளிக் செய்க
 • OTP ஐ உறுதிப்படுத்துங்கள்
 • ATM அட்டை தேவை என்பதை கிளிக் செய்க
 • ATM அட்டையை நீங்கள் எவ்வாறு பெற விரும்புகிறீர்கள் என்பதை தேர்வு செய்யவும்

இலங்கையிலுள்ள எந்தவொரு லங்காபே ATM

இல்லை

இல்லை உங்களால் ATM ஊடாக மட்டுமே பரிமாற்றங்களை செய்ய முடியும்

ஆம், உங்கள் பயன்பாட்டு கட்டணங்கள், தொலைத்தொடர்பு கட்டணங்கள், நிறுவன கட்டணங்களை சேமிப்பு கணக்கு ஊடாக செலுத்த முடியும்

இல்லை அனைத்து பில் கொடுப்பனவுகளும் இலவசம்.

உரிய கால முடிவின்போது உங்கள் சேமிப்பை இலக்கை அடைய ஒரு நிலையான மாதாந்த தொகையை நீங்கள் சேமிக்கலாம்

 • நீங்கள் விரும்பிய முதிர்வு மதிப்பு அல்லது மாதாந்த தவணையை தேர்வு செய்யலாம்.
 • உங்களுக்கு விருப்பமான நிதி வழங்கல் திகதியை நீங்கள் தேர்வு செய்யலாம்
 • இலக்கு காலத்திற்கு எந்த தடையும் இல்லை. நீங்கள் 12 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரை எந்த காலத்தையும் தேர்ந்தெடுக்கலாம்
 • குறைந்தபட்ச மாதாந்த தவணைத் தொகை ரூ. 100/ - இல் இருந்து தொடங்குகிறது
 • இலக்கு அடிப்படையிலான சேமிப்புக் கணக்குடன் இலவச பரிவர்த்தனை சேமிப்புக் கணக்கொன்று வழங்கப்படும்.
 • என்னால் அதிக வட்டி விகிதத்தை பெற முடியுமா?

 • உங்கள் மாதாந்த தவணைகளை நிதி தினத்தன்று அல்லது அதற்கு முன் உங்கள் பரிவர்த்தனை சேமிப்புக் வைப்புச் செய்யலாம் மற்றும் நிலையான அறிவுறுத்தலின் மூலம் தவணை மதிப்பு உங்கள் இலக்கு அடிப்படையிலான சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
 • இலக்கு அடிப்படையிலான சேமிப்புக் கணக்கிற்கு நேரடி வைப்புத்தொகை, நிதி பரிமாற்றம் அல்லது CEFT பரிமாற்றங்களுக்கு அனுமதி இல்லை.
 • இந்த உற்பத்திகான வட்டி விகிதம் என்ன?
 • நீங்கள் 6.50% வட்டி விகிதத்திற்கு தகுதி பெறுவீர்கள். (ஒழுங்குமுறை வழிகாட்டுதல்கள் அல்லது நிறுவனத்தின் முடிவுகளின் காரணமாக தேவைப்படும் போது வட்டி விகிதங்களை மாற்ற நிறுவனத்திற்கு உரிமை உண்டு)

இல்லை> நீங்கள் கணக்கை மூடிவிட்டு புதிய கணக்கொன்றை ஆரம்பிக்க வேண்டும்.

உங்கள் கோரிக்கையை financial.services@dialog.lk. என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். டயலொக் பினான்ஸ் கணக்கிற்கு தண்ட வட்டி விகிதம் அறிவிடப்படும் என்பதுடன் அந்த நிதியானது உங்கள் சேமிப்பு கணக்கிற்கு அனுப்பப்படும்.

சேமிப்பு வட்டி விகிதம் அபராத வட்டி விகிதமாக பயன்படுத்தப்படும்

தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் மாதாந்த தவணையை நீங்கள் வைப்புச் செய்யாவிடின், நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைய உங்கள் கணக்கு முடிவுக்கு வரும் என்பதுடன் உங்களுக்கு அபராதமும் விதிக்கப்படும். மூடுவதற்கான பெறுமதியானது சேமிப்புக் கணக்கில் வரவு வைக்கப்படும்

முதிர்வுத் தொகையானது, முதிர்வு காலத்தில் உங்கள் சேமிப்புக் கணக்கிற்கு மாற்றப்படும்

நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள்

1. சேமிப்பு கணக்கின் கணக்கு வைத்திருப்பவர் (‘கணக்கு’) கீழே உள்ள டயலொக் பினான்ஸ் பிஎல்சி (‘கம்பெனி’) விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டுள்ளார் என்பதை வாசித்து புரிந்துகொண்டார்.

2016 இன் 8 ஆம் இலக்க சட்டம் ஊடாக 1968 ஆம் ஆண்டின் திருத்த சட்ட இலக்கம் 32 ஆல் திருத்தப்பட்ட நபர்களின் பதிவுச் சட்டத்தின் பிரிவு 39B (C) இன் கீழ் இலங்கை நபர்களை பதிவு செய்யும் துறையால் (னுசுP) நிறுவனம் அங்கீகரிக்கப்பட்டுள்ளதை நான் புரிந்துகொள்கிறேன். எனது கீழேயுள்ள தகவல் உட்பட நான் வழங்கிய தகவலின் நம்பகத்தன்மையை மதிப்பிடுவதற்காக> டிஆர்பியுடன் பராமரிக்கப்படும் எனது தேசிய அடையாள அட்டை (NIC) விவரங்களை அணுகவும் நிறுவனத்திற்கு நான் ஒப்புக்கொள்கிறேன்.

 • பெயர்
 • பிறந்த திகதி
 • பால்
 • புகைப்படம்
 • அடையாள அட்டையில் உள்ள தகவல்கள் அடங்கிய குறியீட்டின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்
 • முகவரி
 • பிறந்த இடம்
 • விநியோகிக்கப்பட்ட திகதி
 • அடையாள அட்டையின் முன்பக்க மற்றும் பின்பக்க ஸ்கேன் பிரதிகள்
 • பதிவின் தன்மை (செயலில் / செயலற்ற / இரத்து செய்யப்பட்ட / தவறானது)

3. டயலொக் பினான்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்கு அதன் உரிமை நிறுவனங்கள், அதன் துணை நிறுவனங்கள் அல்லது ஒருங்கிணைந்த சேவைகள் அல்லது ஏனைய வகையில் சேவை வழங்குபவர்களுடன் எனது தகவல்களை பகிர்ந்து கொள்ள நான் ஒப்புக்கொள்கிறேன்

4. கீழே கொடுக்கப்பட்டுள்ள கணக்கின் முக்கிய அம்சங்களையும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நான் வாசித்து புரிந்து கொண்டேன்

 

 • குறைந்தபட்ச வைப்பு தொகை – எந்த வரையறையும் இல்லை.
 • வட்டி செலுத்துதல் – நிறுவன இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிறுவனம் ஊடாக தீர்மானிக்கப்படும் விகித நாளாந்த அடிப்படையில் கணக்கிடப்பட்டு, குறித்த வட்டி மற்றும் கணக்கிற்கு மாதாந்தம் வரவு வைக்கப்படும்.
 • ‘டயலொக் பினான்ஸ் பிஎல்சி’ இன் பெயரில் காசோலை ஊடாக வைப்பு ஏற்றுக்கொள்ளப்படுவது நிறுவனத்தின் விருப்பப்படி மட்டுமே .
 • வரி – சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை அதிகாரிகளால் அவ்வப்போது விதிக்கப்படும் வரிகளுக்கு உட்பட்டது.

 

5. அனைத்து நினைவூட்டல்கள் / கோரிக்கைகள் குறுந்தகவல் சேவை ஊடாக (SMS) நான் / நாம் வழங்கிய கையடக் தொலைபேசி இலக்கத்திற்கு (‘பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி இல’) மற்றும் / அல்லது நிறுவனத்திற்கு நான் கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

 

6. நியமனம்

கணக்கு ஆரம்ப விண்ணப்ப படிவத்தில் நான் சேர்த்துள்ள நியமன விவரங்களை நிர்வகிக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நான் இதன்மூலம் ஒப்புக்கொள்கிறேன்

அ. நியமனமானது கணக்கு வைத்திருப்பவரின் கடைசி விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்யக்கூடாது.

ஆ. பின்வரும் சூழ்நிலைகளில் நியமனம் இரத்து செய்யப்படும்

கீழ்குறிப்பிடும் நிலைமைகளின் கீழ் நியமனம் இரத்து செய்யப்படும்

வைப்பபளரால் நியமனத்தை இரத்து செய்வதற்கான எழுத்துப்பூர்வ அறிவிப்பு அல்லது நிறுவனத்தால் வழங்கப்பட்ட எந்தவொரு ஒன்லைன் தளத்திலும் வைப்பாளரால் நியமிக்கப்பட்ட விவரங்களுக்கு செய்யப்பட்ட திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டவர், வைப்புத்தொகையாளரால் திருத்தப்பட்ட நியமனதாரரின் நியமன விவரங்களில் திருத்தம் செய்யப்பட்டால், இந்த பிரிவு 11 ன் கீழ் வழங்கப்பட்ட நியமனத்தின் முழு விளைவைக் கொண்டிருக்கும்.

கணக்கு வைத்திருப்பவரால் முறையாக நியமிக்கப்பட்ட பிறகு

ஒன்றுக்கு மேற்பட்ட நியமனங்கள் மற்றும் விநியோகத்திற்கான விகிதம் குறிப்பிடப்படவில்லை எனில், செலுத்த வேண்டிய பணத்தை சமமான பங்குகளில் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டவருக்கு வழங்கப்படும்.

இந்த நியமனம் செய்யப்பட முடியாத பட்சத்தில் சட்டப்பூர்வமாக உரிமையுள்ள நபர் / நபருக்கு பணம் செலுத்தப்படும்.

அடையாளச் சான்றை சமர்ப்பித்த பின்னர் மட்டுமே நியமனம் வழங்கப்பட்டவருக்கு செலுத்தப்படும் என்பதுடன் எந்தவொரு தகவலையும் / ஆவணங்களையும் கோருவதற்கு நிறுவனத்திற்கு உரிமை உண்டு.

 

7. ஏடிஎம்- டெபிட் கார்ட்

எனது வேண்டுகோளுக்கு இணங்க நிறுவனம் ஊடாக எனக்கு தானியங்கி டெல்லர் மெஷின் (ஏடிஎம்) வசதிகள் மற்றும் எனக்கு டெபிட் / ஏடிஎம் கார்டு (‘கார்டு’) வழங்குதல், பின்வரும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு கட்டுப்படுவதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

 • எல்லா நேரங்களிலும் அட்டையை நிறுவனத்தின் சொத்தாகக் கருதி நிபந்தனையின்றி மற்றும் நிறுவனத்தின் தேவைக்கேற்ப வழங்குதல்.
 • திரும்பப் பெறுதல் அல்லது பரிமாற்றத்தை ஈடுசெய்ய எனதுஃஎங்கள் கணக்கில் போதுமான நிதி இல்லாவிட்டால் அட்டையைப் பயன்படுத்தவோ அல்லது பயன்படுத்தவோ முயற்சிக்க வேண்டாம்.
 • அட்டையின் பெயரைக் கொண்ட நபருக்கு மட்டுமே அட்டையைப் பயன்படுத்துவதை மாற்ற முடியாது
 • கார்ட் இரத்து அல்லது அல்லது திரும்பப் பெறுதல் பற்றிய எந்த அறிவிப்பும் நிறுவனத்தால் அல்லது நிறுவனத்தின் சார்பாக செயல்படும் எந்தவொரு நபரிடமிருந்தும் எனக்கு வழங்கப்பட்ட பிறகு கார்ட்டை பயன்படுத்தவோ அல்லது பயன்படுத்தவோ முயற்சிக்கக் கூடாது
 • எந்த சூழ்நிலையிலும் அட்டை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏடிஎமில் கார்ட் பயன்படுத்த வசதியாக எனக்கு ஒதுக்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணை (பின் எண்) எந்த நபருக்கும் வெளிப்படுத்த வேண்டாம்.
 • அட்டை தொலைந்தாலே அல்லது திருடு போனாலே அது குறித்து உடனடியாக நிறுவனத்திற்கு அறிவித்தல்
 • கார்ட் காணமல்போய் அல்லது திருடப்பட்டு அல்லது PIN இலக்கம் அத்துமீறி இன்னொருவரால் பெறப்பட்டமை தொடர்பாக நிறுவனத்திற்கு அறிவித்த பின்னர் இடம்பெறும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும்.
 • மேற்கூறிய (g) க்கு உட்பட்டு, நிறுவனத்தின் பணத்தை திரும்பப் பெறுதல் மற்றும்/அல்லது இடமாற்றங்களின் பதிவை அனைத்து நோக்கங்களுக்காகவும் உறுதியான மற்றும் பிணைப்பாக ஏற்றுக்கொள்ளவும் மற்றும் திரும்பப் பெறப்பட்ட அல்லது என் அறிவு அல்லது அதிகாரம் இல்லாமல் அல்லது மாற்றப்பட்ட அனைத்துத் தொகைகளுடனும் என் கணக்கிற்கு வைப்புச் செய்ய நிறுவனத்திற்கு அனுமதிக்கின்றேன்.
 • ஏடிஎம் திரையில் குறிப்பிடப்பட்ட தொகை அல்லது அச்சிடப்பட்ட kpFjp tprhuiz சீட்டு அல்லது ரசீது cl;gl ve;jnthU jfty; njhlu;ghfTk; நிறுவனத்துடனான எனது கணக்கின் நிலைக்கு எந்த நோக்கத்திற்காகவும் எடுக்கப்படாது.
 • கார்ட் அல்லது ஏடிஎம் அல்லது ஏடிஎம் செயலிழப்பு அல்லது பற்றாக்குறையால் ஏற்படும் எந்த இழப்பு அல்லது சேதத்திற்கும் எந்த வகையிலும் நிறுவனம் பொறுப்பாகாது.
 • இருந்தபோதிலும் அட்டையின் பயன்பாட்டிற்கு மேலே உள்ள (த) விதிமுறைகளின் பொதுத்தன்மைக்கு தீங்கின்றி பயன்படுத்த வேண்டியது என ஒரே நோக்கம் என்பதுடன் அட்டையை பயன்படுத்துவதால் ஏற்படும் அல்லது ஏற்படும் அபாயங்கள் அனைத்தையும் நான் நன்கறிவேன்.
 • எந்தவொரு காரணத்திற்காகவும் கார்ட் ஏற்றுக்கொள்ளப்படாமை தொடர்பாக நிறுவனம் பொறுப்பேற்காது.
 • ஏதாவது காரணத்திற்காக கார்ட் தேவைப்படாவிட்டால் அல்லது கார்ட் இரத்து செய்வதற்காக திரும்ப வழங்கும் போது நிறுவனத்திலுள்ள எனது கணக்கை மூட வேண்டுமா?
 • கார்டை இரத்து செய்ய அல்லது புதுப்பிக்க மறுக்க, எந்தவொரு நேரத்திலும் அந்த வசதியை முடிவுக்கு கொண்டு வர நிறுவனத்திற்கு சுதந்திரம் உண்டு. .
 • இலங்கை ரூபா தவிர்ந்த ஏனைய நிதி ஊடாக மேற்கொள்ளப்படும் அனைத்து கார்ட் கொடுக்கல் வாங்கல்கள் வீசா/மாஸ்டர்கார்ட் இன்டர்நேஷனல் ஊடாக பரிமாற்றப்படும் திகதியிலுள்ள அந்நிய செலாவணி விகிதத்திற்கு அமையே இலங்கை ரூபாவிற்கு மாற்றப்பட்டு பின்னர் கார்ட் கணக்கிற்கு பற்று வைக்கப்படும். மேலும் நிறுவனத்தால் அறவிடப்படும் மேலதிக விகிதம் மற்றும் விசா/ மாஸ்டர் கார்ட் இன்டர்நெஷனல் நிறுவனத்தால் அறிவிடப்படும் எந்தவொரு கொடுக்கல் வாங்கலுக்கும் உட்பட்டதாயின், அதனை நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
 • கார்டைப் பயன்படுத்தி வைப்பு செய்யப்பட்ட பணம் எனது கணக்கிற்கு வைப்பு செய்யப்படுவது நிறுவனம் அதனை சரிபார்த்த பின்னர் மட்டுமே. தன்னியக்க டேலர் இயந்திரம் ஊடாக வைப்பு செய்யப்படும் சந்தர்ப்பத்தில் விநியோகிக்கப்படும் அறிக்கை ஊடாக நான் வைப்புச் செய்ததேன் என்பதற்காக நிறுவனம் கட்டுப்படாது. கடித உறையிலுள்ளதை நிறுவனம் எண்ணிய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்.
 • கூட்டுக் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு இணையாகவும் தனித்தனியாகவும் பிணைக்கப்பட்டுள்ளனர். மேலும் அட்டையைப் பயன்படுத்துவதன் மூலம் செயலாக்கப்படும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பொறுப்பு கூற வேண்டியவர்கள்
 • சொத்து விற்பனை மற்றும் வெளிநாடுகளில் நிதி சொத்துக்களை வாங்குவதற்கான கொடுப்பனவுகளுக்கு இந்த அட்டையை பயன்படுத்தமாட்டேன் என நான் உறுதியளிக்கிறேன்.
 • கார்ட் பயன்படுத்துவதற்காக நிறுவனம் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தவிர, கார்ட் உரிமயாளர் கார்ட் பயன்படுத்துவது தொடர்பாக மாஸ்டர்கார்ட்/ விசா இன்டர்நேஷனல் ஊடாக விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறையால் கட்டுப்படுத்தப்படும்.
 • தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பொருள் கொள்வனவு செய்தல் மற்றும் செலவுகள்

மூலதன பரிவர்த்தனைகள் மற்றும் ஃ அல்லது வியாபார ரீதியாக பொருட்களை வாங்க / இறக்குமதி செய்யும்போது பணம் செலுத்துவதற்குப் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்பதை நான் அறிவேன்.

 

8. மின்னஞ்சல் சான்று

மின்னஞ்சல் வாயிலாக அனுப்பப்பட்ட அறிவுறுத்தல்கள், நிறுவனத்துக்கும் எனக்கும் இடையில் வழிமுறைகளைப் பகிர்வதற்கு மட்டுமே கிடைக்கும்:

 • நிறுவனத்தில் மற்றும் நான் வைத்திருக்கும் கணக்குகளுக்குள் நிதி பரிமாற்றம்;
 • நிறுவனம்
 • நான் மற்றும் பிற வங்கிகள் மற்றும் / அல்லது உரிமம் பெற்ற நிதி நிறுவனங்கள் அல்லது வேறு எந்த மூன்றாம் தரப்பு கணக்கு (களுக்கு) இடையே நிதி பரிமாற்றம்
 • நிறுவனத்தில் எனது சேமிப்புக் கணக்கில் டெபிட் மூலம் நிலையான வைப்பு மற்றும் / அல்லது முதலீட்டுத் திட்டத்தை உருவாக்குதல்;
 • நான் வைத்திருக்கும் கணக்களுக்கான கணக்கு அறிக்கையை குறித்த நிறுவனத்துடன் பகிர்தல்
 • பொருந்தக்கூடிய எந்தவொரு சந்தர்பத்தில் எனது கணக்குகள் தொடர்பாக அறிந்துகொள்ளும் விவரங்களை மாற்றுவது தொடர்பில் நிறுவனத்துடன் பகிர்தல் (நிறுவனத்தின் திருப்திக்கான ஆவணங்களின் சான்றிற்கு உட்பட்டது).
 • கணக்கை மூடுதல் மற்றும் மீதமுள்ள சேமிப்பு தொகையை நியமிக்கப்பட்ட கணக்கிற்கு மாற்றுவதற்கான கோரிக்கை

என்னால் வெளிப்படையாக அறிவுறுத்தப்பட்டு நிறுவனத்தால் முறையாக அங்கீகரிக்கப்படாவிட்டால், கணக்கு தொடங்கும் விண்ணப்பத்தில் நான் வழங்கிய மின்னஞ்சல் முகவரி இந்த உட்பிரிவின் நோக்கத்திற்காக எனது பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியாகும்.

மின்னஞ்சல் மூலம் கணக்கை செயற்படுத்துல் மேற்குறிப்பிட்ட பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்படும் ஆலோசனைகளுக்கு அமைய வரையறுக்கப்பட வேண்டும் என்பதுடன் நிறுவனம் ஊமாக எனக்கு வழங்கப்பட்ட அவர்களது மின்னஞ்சல் முகவரி ஊடாக கிடைக்க வேண்டும். அந்த தகவல்களின் செல்லுபடிதன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்வதற்கு நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பாகாது .

நிறுவனம் மூலம் எனக்கு அறிவிக்கப்பட்ட வேலை நாட்கள் மற்றும் நிறுவனத்தின் சாதாரண வியாபார நேரத்தில் என்னால் அனுப்பப்படும் மற்றும் நிறுவனத்திற்கு கிடைக்கும் எந்தவொரு மின்னஞ்சல் மீது மட்டுமே நிறுவனம் செயல்படும்.

நிறுவனத்தின் கருத்துப்படி தெளிவற்ற அல்லது பல மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட அறிவுறுத்தல்களின்படி செயல்பட நிறுவனம் கட்டுப்படாது. அதனால் ஏற்படும் இழப்புகள் அல்லது சேதங்களுக்கு நிறுவனம் பொறுப்பாகாது.

மேற்கூறியபடி மின்னஞ்சல் மூலம் பெறப்பட்ட அறிவுறுத்தல்களின்படி செயல்படும் நிறுவனம், அத்தகைய அறிவுறுத்தல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளில் எனக்கு ஏற்படும் இழப்புகள் / சேதங்களுக்கு பொறுப்பாகாது. நான் அல்லது வேறு எந்த மூன்றாம் தரப்பினரால் எனது மின்னஞ்சல் மூலம் மோசடி அல்லது குற்றம் காரணமாக ஏற்படக்கூடிய விளைவுகளுக்கான எந்தவொரு பொறுப்பிலிருந்தும் நிறுவனம் முற்றாக விலக்கப்படும்.

அனைத்து சட்ட, ஒழுங்குமுறை மற்றும் செயற்படுத்தும் அமைப்புகளின் அனைத்து சட்டங்கள் அல்லது ஒழுங்குமுறைகளுக்கு இணங்க நான் எல்லா நேரங்களிலும் பொறுப்பேற்கிறேன். இங்குள்ள மின்னஞ்சல் ஊடாக என்னால் வழங்கப்பட்ட ஆலோசனையின் கீழ் செயற்படும் நிறுவனம் ஊடாக செலுத்தப்பட்ட ஏதாவது உரிமைகோரல்கள், இழப்புகள், சேதங்கள், செலவுகள், பொறுப்புகள் மற்றும் செலவினங்களுக்கு நான் பொறுப்பேற்பேன்.

கட்டமைக்கப்படாத துணை சேவைத் தரவு (USSD)

எனது பதிவு செய்யப்பட்ட கையடக்க தொலைபேசி இலக்கம் ஊடாக பெறப்பட்ட கட்டமைக்கப்படாத துணை சேவைத் தரவு (USSD) மூலம் எனது அட்டை தொடர்பான பட்டியலிடப்பட்ட செயல்பாடுகளை செய்வதற்கு நான் ஒப்புக்கொள்கிறேன்;

 • ஏடிஎம் கார்ட்டை சேமிப்பு கணக்குடன் இணைத்தல்;
 • PIN இலக்கத்தை மீள அமைத்தல்
 • அட்டை செயல்படுத்தல் / தடுத்தல் (செயலிழப்பு)
 • கணக்கு மிகுதி விசாரணை;

என்னால் வெளிப்படையாக அறிவுறுத்தப்பட்டு நிறுவனத்தால் முறையாக அங்கீகரிக்கப்படாவிட்டால்இ கணக்கு ஆரம்பிக்கும் விண்ணப்பத்தில் நான் வழங்கிய பதிவு செய்யப்பட்ட கையடக்க தொலைபேசி இலக்கத்தை இழப்பீட்டுத் திட்டத்திற்காக பதிவுசெய்யப்பட்ட கையடக்க தொலைபேசி இலக்கமாக கொள்ளப்படும்.

மேற்குறிப்பிட்டுள்ள USSD மூலம் பெறப்பட்ட அறிவுறுத்தல்களின்படி செயல்படும் நிறுவனம் அத்தகைய அறிவுறுத்தல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளிலிருந்து எனக்கு ஏற்படும் இழப்புகள் / சேதங்களுக்கு பொறுப்பாகாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். மோசடி அல்லது குற்றம் அல்லது எனது பதிவு செய்யப்பட்ட கையடக்க தொலைபேசி இலக்கம் ஊடாக என்னால் அல்லது வேறு எந்த மூன்றாம் தரப்பினரால் ஏற்படும் / ஏற்படக்கூடிய விளைவுகளுக்கான எந்தவொரு பொறுப்பிலிருந்தும் நிறுவனம் முற்காக நீக்கப்படும்

10. ஒன்லைன் தளம்

எனது வசதிக்காக, இணக்கமான சாதனம் (‘சாதனம்’ எந்தவொரு கையடக்க தொலைபேசி மற்றும் பயன்பாட்டிலுள்ள சிம் கார்ட், டெப் அல்லது அதற்கு இணையாக நிறுவனத்தால் வழங்கப்பட்ட ஏதாவது சாதனமாக இருத்தல் வேண்டும்) ஊடாக எனக்கு பிரவேசிக்க நிறுவனம் வழங்கியுள்ளதை நான் ஒப்புக் கொள்கின்றேன்.

அத்தகைய ஒன்லைன் தளங்களின் அணுகலின் போது உட்பிரவேசிப்பதற்கு ஒரு தடவை மட்டும் பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP) உட்பட எந்த கடவுச்சொற்களும் கண்டிப்பாக எனது பயன்பாட்டிற்காக இருப்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் மற்றும் புரிந்துகொள்கிறேன். அத்துடன் நான் எந்த காரணத்திற்காகவும் மூன்றாம் தரப்பினருடன் அதனை பகிர மாட்டேன்.

அத்தகைய ஒன்லைன் தளங்களை அணுக பயன்படுத்தும் சாதனத்தின் இழப்பு அல்லது திருட்டு மூன்றாம் தரப்பினருக்கு அதில் உள்ள எனது முக்கியத் தரவை வெளிப்படுத்தும் அபாயம் உள்ளதை நான் ஒப்புக்கொள்கிறேன் மற்றும் புரிந்துகொள்கிறேன். எனது சாதனத்தின் இழப்பு அல்லது திருட்டு குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாகத் தெரிவிக்க ஒப்புக்கொள்கிறேன்.

நான் எந்த தாமதமுமின்றி இதுபோன்ற இழப்பு அல்லது திருட்டு குறித்து உடனடியாக நிறுவனத்திற்கு தெரியப்படுத்த ஒப்புக்கொள்கிறேன். மேலும் நிறுவனத்தால் எனக்கு கிடைக்கப்பெற்ற தகவல் தொடர்பு வழிமுறைகள் மூலம் மூன்றாம் தரப்பினரின் கணக்கின் எந்த அணுகலையும் தடுக்குமாறு நிறுவனத்தை கேட்டுக்கொள்கிறேன்.

அங்கீகரிக்கப்படாத அணுகல் காரணமாக மேற்கூறியபடி நிறுவனத்திற்கு தகவல் தெரிவிப்பதற்கு முன்புஇ நான் சந்தித்த நட்டங்கள், இழப்புகள், சேதங்கள், செலவுகள், பொறுப்புகள் மற்றும் செலவுகளுக்கு நிறுவனம் எந்தப் பொறுப்பையும் ஏற்காது.

நான் இங்கு குறிப்பிட்டபடி நிறுவனத்திற்கு முறையாகத் தெரிவிக்கத் தவறினால், அது எனது முழுப் பொறுப்பாகும். அதேசமயம் நிறுவனம் எந்த உரிமைகோரல்கள்இ இழப்புகள்இ சேதங்கள்இ செலவுகள்இ பொறுப்புகள் மற்றும் செலவுகள் ஆகியவற்றிற்கு பொறுப்பேற்காது.

11. கணக்கின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை மாற்றுவதற்கு அல்லது மீளப் பெறுவதற்கு நிறுவனத்திற்கு உரிமை உண்டு என்பதை நான் ஒப்புக்கொள்கின்ற அதேநேரம் அதனை புரிந்தும் கொள்கின்றேன்.

Read More

எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்

By giving your confirmation you explicitly give consent for us to store and use this information to service your requests. If you do not consent we will not store any personal information and will only send an email with the relevant details in order to service your requests.

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.
* Required Fields
We are passionate about helping our customers for we are delighted to get acquainted!

Related Products

We would like
to hear from you
genie செயலியை பெற்றுக்கொள்ளுங்கள் genie

genie செயலியை இன்றே பெற்றுக்கொண்டு உங்கள் நிதி சார்ந்த எதிர்காலத்தை கட்டுப்படுத்துங்கள்