தனியுரிமை அறிவிப்பு

வெளியீட்டு திகதி: 05.05.2021

டயலொக் பினான்ஸ் பிஎல்சி, அதன் துணை நிறுவனங்கள் மற்றும் பங்காளிகள் (இதன் பின்னர் கூட்டாக ‘டயலொக் பினான்ஸ் ‘நாம் ‘நாங்கள்’ அல்லது ‘எங்கள்’ என அறியப்படும்) எங்கள் வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் வணிக பங்காளிகள், விருந்தினர்கள், வேலைவாய்ப்பு ஆகியவற்றின் தனிப்பட்ட தரவைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ளன. பங்களாளர்கள் மற்றும் ஊழியர்கள் மற்றும் எங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும்/அல்லது வணிக பங்காளிகள் (Thiranda ‘தரவு பொருள்’ என குறிப்பிடப்படும்) சார்பாக பணியாற்றும் தனிநபர்களின் தனிப்பட்ட தரவு எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

டயலொக் பினான்ஸ் உங்களின் தனியுரிமையை தீவிரமாக எடுத்துக்கொள்கிறோம். எங்கள் செயல்பாடுகள் வெளிப்படையானவை. உங்கள் உரிமைகளுக்கு மதிப்பளிப்பது, எமது தனிப்பட்ட தரவைப் பயன்படுத்துவதில், வலுவான இணைய பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தனிப்பட்ட தரவை மாற்றும்போது சரியான கவனிப்பு ஆகிய எங்கள் உண்மையான கொள்கைகளால் வலியுறுத்தப்படுகின்றன.

உங்கள் தனிப்பட்ட தரவுகளை செயலாக்கும்போது டயலொக் பினான்ஸ் பின்வறுவனற்றை உறுதி செய்யும்:

  • உங்கள் தனிப்பட்ட தரவுகள் சட்டப்பூர்வமாகவும் வெளிப்படையான முறையிலும் செயலாக்கப்படும். இதனால் உங்கள் தனிப்பட்ட தரவுகளோடு இணைந்த அனைத்து செயலாக்க நடவடிக்கைகளையும் உங்களால் அறிந்துகொள்ள முடியும்.
  • கீழே பட்டியலிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக மட்டுமே உங்கள் தனிப்பட்ட தரவுகள் எங்களால் சேகரிக்கப்படும். மேலும் அந்த நோக்கங்களுடன் பொருந்தாத வகையில் செயற்படுத்தப்படாது.
  • கீழே பட்டியலிடப்பட்டுள்ள நோக்கங்களுக்காக வரையறுக்கப்பட்ட மற்றும் தேவைப்படும் தனிப்பட்ட தரவை மட்டுமே நாங்கள் சேகரிப்பதுடன் தேவைக்கு அதிகமான தனிப்பட்ட தரவுகளை சேகரிக்க மாட்டோம்.
  • உங்கள் தனிப்பட்ட தரவுகள் துல்லியமாக இருக்கும் என்பதுடன் தேவைப்பட்டால், அவை புதுப்பிக்கப்பட்ட நிலையில் இருக்கும்.
  • உங்கள் தனிப்பட்ட தரவுகளானது தனிப்பட்ட தரவுகளை தயார்படுத்தும் நோக்கத்திற்காக அடையாளம் காணும் காலகட்டத்தை விட அதிக காலம் vaikkappadaathu.
  • உங்கள் தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்பான முறையில் செயலாக்கப்படும்.

இந்த தனியுரிமை அறிவிப்பு (‘தனியுரிமை அறிவிப்பு’) விளக்குவது யாதெனில்:

  • எங்களால் எவ்வாறு தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்பட்டு மேலும் செயலாக்கப்படுகிறது;
  • எந்த நோக்கத்திற்காக அது எங்களால் சேகரிக்கப்பட்டு மேலும் செயலாக்கப்படுகிறது;
  • தனிப்பட்ட தரவுகளின் ஆதாரங்கள் (ஏதேனும் இருந்தால்);
  • தனிப்பட்ட தரவுகள் யாருக்கு வெளிப்படுத்தப்படுகிறது; மற்றும்
  • தனிப்பட்ட தரவுகளை அடைந்து அதனை புதுப்பிப்பது எவ்வாறு மற்றும் தனிப்பட்ட தரவுளின் மேலதிக விபரங்களை அறிய எங்கே செல்ல வேண்டும்? “

மற்றொரு நபரின் தனிப்பட்ட தரவை நீங்கள் எங்களுக்கு வழங்கினால் அந்த நபரின் தனிப்பட்ட தரவை எங்களுக்கு வழங்குவதற்கு முன்பு நீங்கள் அவரிடமிருந்து ஒப்புதல் பெற்றுள்ளீர்கள் என்பதே இதன் பொருளாகும். இந்த இரகசியத்தன்மை தொடர்பான கொள்கை ‘உங்கள் தனிப்பட்ட தரவுகள்’ என குறிப்பிடுவதற்கு நிஙக்ள் எங்களுக்கு வழங்கும் அத்தகைய நபரின் தரவுகளும் இடம்பெறும்.

இந்த தனியுரிமை அறிவிப்பை நீங்கள் பயன்படுத்தும் பொருட்கள் மற்றும்/அல்லது சேவைகளுக்கு குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் வாசிக்க வேண்டும். இந்த அறிவிப்புக்கும் குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டால், இந்த அறிவிப்பு அத்தகைய முரண்பாட்டின் அளவிற்கு மேலாதாக இருக்கும்.

புதிய அறிவிப்பு இங்கே மற்றும் / அல்லது எங்கள் பிற தளங்களில் வெளியிடுவதன் மூலம் நாம் அவ்வப்போது திருத்தலாம், மாற்றலாம் அல்லது புதுப்பிக்கலாம். நீங்கள் எங்கள் உற்பதிகள் மற்றும்/அல்ல்து சேவையை தொடர்ந்து பெறுவீர்கள் எனின் அத்தகைய மாற்றங்களுக்கும் புதுப்பித்தலுக்கும் நீங்கள் உடன்படுகின்றீர்கள்

பிள்ளைகள் தொடர்பான தனிப்பட்ட தரவுகள்

நீங்கள் 18 வயதிற்குட்பட்டவராக இருந்தால், உங்கள் தனிப்பட்ட தரவை (உதாரணமாக: உங்கள் பெயர், முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்றவை) எங்களுக்கு அனுப்புவதற்கு முன்பு உங்கள் பெற்றோர், பாதுகாவலர் அல்லது உங்கள் மீது பொறுப்புள்ள நபரின் ஒப்புதலை நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்று நாங்கள் எடுத்துக்கொள்கிறோம். ).

எம்மால் எத்தகைய தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கப்படுகின்றன?

நாங்கள் சேகரிக்கும் அல்லது பெறும் தனிப்பட்ட தரவுகளின் வகைகள் உங்களுடனான எங்கள் உறவைப் பொறுத்து மாறுபடலாம் மற்றும் பின்வருவனவற்றை உள்ளடக்கலாம்:

  1. வாடிக்கையாளர்களுக்கு
  • தொடர்பு விபரங்கள் (பெயர், முகவரி, மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இலக்கம் போன்றவை);
  • அடையாளத் தகவல்கள் (தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், பிறந்த திகதி, ஐபி முகவரி, இணைய குக்கீகள் போன்றவை);
  • மனிதத் தகவல்கள் ( வயது,திருமண நிலை, பாலினம் போன்றவை);
  • போட்டிகள் அல்லது பரிசு வழங்கப்படும் போட்டிகளுக்கு நீங்கள் சமர்ப்பிக்கும் எங்கள் தளங்களில் பதிவேற்றும் புகைப்படங்கள்.
  • இடம் தொடர்பான தகவல்கள்
  • உற்பத்தி தொடர்பான தகவல் (விருப்பத்தேர்வுகள் போன்றவை);
  • நிதித்தகவல்கள் (நேரடி வைப்பு மற்றும் மற்றும் பில் கட்டணங்கள், வங்கி பரிவர்த்தனைகள் போன்றவை);
  • எமது கண்காணிப்பு கெமரா (சிசிடிவி) கட்டமைப்பால் பதிவுசெய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட எந்தவொரு காட்சியும்; மற்றும்
  • நீங்கள், எமது வாடிக்கையாளர் பராமரிப்பு நிலையங்களுக்கு மேற்கொள்ளும் அழைப்புக்களை பதிவு செய்தல்
  1. பங்குதாரர்களுக்கு
  • தொடர்பு விபரங்கள் (பெயர், முகவரி, மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இலக்கம் போன்றவை);
  • அடையாளத் தகவல்கள் (தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், பிறந்த திகதி, ஐபி முகவரி, இணைய குக்கீகள் போன்றவை);
  • மனிதத் தகவல்கள் ( வயது,திருமண நிலை, பாலினம் போன்றவை);
  • தேசியம் மற்றும் வதிவிடம்
  • வங்கி கணக்கு விவரங்கள் (வங்கி கணக்கு இலக்கம், வங்கி கிளை மற்றும் வங்கி போன்றவை);
  • பயனாளிகள் / நெருங்கிய உறவினர்களின் விவரங்கள்;
  • எமது கண்காணிப்பு கெமரா (சிசிடிவி) கட்டமைப்பால் பதிவுசெய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட எந்தவொரு காட்சியும்; மற்றும்
  • சமய நம்பிக்கைகள்
  1. வியாபார பங்காளர்கள் மற்றும் சப்ளையர்களுக்கு
  • தொடர்பு விபரங்கள் (பெயர், முகவரி, மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இலக்கம் போன்றவை);
  • அடையாளத் தகவல்கள் (தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், பிறந்த திகதி, ஐபி முகவரி, இணைய குக்கீகள் போன்றவை);
  • வியாபார தகவல்கள் (நிறுவனத்தின் பெயர், முதலாளியின் பெயர், பதவி, திணைக்களம் போன்றவை) மற்றும்
  • எமது கண்காணிப்பு கெமரா (சிசிடிவி) கட்டமைப்பால் பதிவுசெய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட எந்தவொரு காட்சியும்; மற்றும்
  1. பார்வையாளர்களுக்கு (எமது எந்தவொரு வளாகத்திற்கு / அலுவகலத்திற்கு / ஒன்லைன் தளங்களுக்கு)
  • தொடர்பு விபரங்கள் (பெயர், முகவரி, மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இலக்கம் போன்றவை);
  • அடையாளத் தகவல்கள் (தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், பிறந்த திகதி, ஐபி முகவரி, இணைய குக்கீகள் போன்றவை);
  • வியாபார தகவல்கள் (நிறுவனத்தின் பெயர், முதலாளியின் பெயர், பதவி, திணைக்களம் போன்றவை)
  • இனம்;
  • தேசியம்;
  • புகைப்படம் : மற்றும்
  • எமது கண்காணிப்பு கெமரா (சிசிடிவி) கட்டமைப்பால் பதிவுசெய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட எந்தவொரு காட்சியும்; மற்றும்
  1. வேலைவாய்ப்பு எதிர்பார்ப்பவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு
  • தொடர்பு விபரங்கள் (பெயர், முகவரி, மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி இலக்கம் போன்றவை);
  • அடையாளத் தகவல்கள் (தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, சாரதி அனுமதிப்பத்திரம், பிறந்த திகதி, ஐபி முகவரி, இணைய குக்கீகள் போன்றவை);
  • கல்வி மற்றும் தொழில்முறை தகவல் (கல்வி மற்றும் தொழில்முறை தகுதிகள் மற்றும் அனுமதி பத்திரங்கள் போன்றவை);
  • வேலை விபரங்கள் (முன்னைய வேலை, பதவி, முன்னைய முதலாளி, நடுவர் விபரங்கள்)
  • பயோமெட்ரிக்ஸ்;
  • பாலினம்;
  • இனம்;
  • தேசியம்;
  • வயது;
  • அவசர தொடர்பு தகவல் (பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி போன்றவை);
  • திருமண நிலை;
  • பயனாளிகள் / நெருங்கிய உறவினர்களின் விவரங்கள்;
  • நிதித் தகவல் (நேரடி வைப்பு கணக்கு போன்றவை);
  • தகவல் தொழில்நுட்ப தகவல்கள் (பதிவு ஆவணங்கள், மென்பொருள் /வன்பொருள் இன்வன்டரீஸ், பயனர் செயல்பாடுகள் போன்றவை);
  • புகைப்படம்
  • எமது கண்காணிப்பு கெமரா (சிசிடிவி) கட்டமைப்பால் பதிவுசெய்யப்பட்ட அல்லது பதிவு செய்யப்பட்ட எந்தவொரு காட்சியும்; மற்றும்
  • மேலதிக வேலைவாய்ப்பு தகவல்கள் (செயல்திறன் மற்றும் ஒழுக்காற்று அறிக்கை, சுகாதார, வைத்தியசாலை அனுமதி மற்றும் வருடாந்த விடுமுறை அறிக்கை, சம்பள விவரங்கள் போன்றவை;)
  • உங்கள் சுகாதார பரிசோதனைகள் மற்றும் மருத்துவ அறிக்கைகள் ஏதேனும் இருந்தால்;
  • தத்துவ மற்றும் அரசியல் பார்வைகள் அல்லது இணைப்புகள்;
  • சமய நம்பிக்கைகள்: மற்றும்
  • குற்றவியல் பதிவு மற்றும் பொலிஸ் அறிக்கைகள்

எம்மால் சேகரிக்கப்படும் மேலதிக தனிப்பட்ட தரவுகள்

யுத்தம், பயங்கரவாதம், கலவரம், இயற்கை பேரழிவு அல்லது தொற்று நோய் போன்ற் நெருக்கடி காலங்களில் எம்மால் சேகரிக்கப்படலாம்:

  • உங்கள் உடல்நலம் மற்றும் உடல் நிலை;
  • உங்கள் வீட்டிலுள்ள தனிநபர்களின் உடல்நிலை;
  • “உங்கள் சுகாதார பரிசோதனைகள் மற்றும் மருத்துவ அறிக்கைகள் ஏதேனும் இருந்தால்;
  • உங்கள் உடல் வெப்பநிலை;
  • உங்கள் இருப்பிடம்; மற்றும்
  • அரசியல் பார்வை அல்லது தொடர்புகள்.

உங்கள் தனிப்பட்ட தரவுகளை நாம் எப்போது சேகரிக்கின்றோம்?

உங்கள் தனிப்பட்ட தரவுகளை நாம் சேகரிப்போம் அல்லது பெறுவோம்:

  1. வாடிக்கையாளர்களுக்கு
  • நீங்கள் எங்கள் வலையமைப்பின், பொருட்கள் மற்றும்ஃஅல்லது சேவைகளைப் பயன்படுத்தும் போது (எமது அழைப்பு நிலையங்கள், விநியோக பிரதிநிதிகள் மற்றும் விற்பனை செனல்கள் உட்பட)
  • நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளும்போது அல்லது எங்கள் தயாரிப்புகள் மற்றும்ஃஅல்லது சேவைகள் அல்லது வேறு எந்த நோக்கங்களுக்கான தகவலை பதிவு செய்யும்போது
  • நீங்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளும்போது (குறுந்தகவல், தொலைபேசி அழைப்புகள், பிற டிஜிட்டல் செனல்கள், மின்னஞ்சல்கள், தொடர் வினாக்கள், ஆய்வுகள் போன்றவை).
  • எமது எந்தவொரு டிஜிட்டல் பயன்பாடுகளையும் நீங்கள் பயன்படுத்தும்போது அல்லது தொடர்பு கொள்ளும்போது, எமது வலைத்தளங்கள் அல்லது சமூக ஊடக பக்கங்களில் ஏதேனும் ஒன்றைப் பார்வையிடவும்.
  • எமது பிரசார நிகழ்ச்சிகள், ஊக்கத்தொகை அல்லது லோயல்டி திட்டங்களில் நீங்கள் பங்கேற்கும்போது.
  • எமது ஏதேனும் வளாகத்திற்கு நீங்கள் பிரவேசிக்கும்போது
  • வெளி நிறுவனங்களிலிருந்து (கடன் குறிப்பு முகவர்கள், பரிசோதனை அல்லது விசாரணை முகவர்கள் போன்றவை).
  • எங்களுடன் உங்கள் தொடர்புக்க அமைய எமது உள்ளக தரவு களஞ்சியத்திலிருந்து நிறுவனம் வரை, துணை நிறுவனங்கள் வரையானது
  • எமது கண்காணிப்பு கெமரா (சிசிடிவி) கட்டமைப்பிலிருந்து
  1. பங்குதாரர்களுக்கு
  • எமது பங்கு பதிவேட்டிலிருந்து
  • உங்கள் தொடர்புத் தகவல்கள் மற்றும் நியமன விவரங்களைப் புதுப்பிக்கும் பொருட்டு நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ளும்போது.
  • உங்கள் அடையாள ஆவணம் (களை) எங்களுக்கு வழங்கும்போது.
  • உங்களின் சான்றிதழ்களின் பிரதிகளை விநியோகித்தல், பங்குச் சான்றிதழ்களைத் திருத்துதல், பங்குப் பரிமாற்றங்களை நடத்துதல், ஈவுத்தொகை ஆணை தொடர்பான தகவல்களைப் புதுப்பித்தல் போன்றவற்றுக்கு நீங்கள் எங்களுடன் தொடர்புகொண்டால்,
  • நீங்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளும்போது (குறுந்தகவல், தொலைபேசி அழைப்புகள், பிற டிஜிட்டல் செனல்கள், மின்னஞ்சல்கள் போன்றவை).
  • எமது ஏதேனும் வளாகத்திற்கு நீங்கள் பிரவேசிக்கும்போது
  • எமது கண்காணிப்பு கெமரா (சிசிடிவி) கட்டமைப்பிலிருந்து
  1. வியாபார பங்காளர்கள் மற்றும் சப்ளையர்களுக்கு
  • நீங்கள் எங்கள் வலையமைப்பு, உற்பத்திகள் மற்றும் சேவைகளை பயன்படுத்தும்போது
  • நீங்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளும்போது (குறுந்தகவல், தொலைபேசி அழைப்புகள், பிற டிஜிட்டல் செனல்கள், மின்னஞ்சல்கள், தொடர் வினாக்கள், ஆய்வுகள் போன்றவை).
  • எமது எந்தவொரு டிஜிட்டல் பயன்பாடுகளையும் நீங்கள் பயன்படுத்தும்போது அல்லது தொடர்பு கொள்ளும்போதுஇ எமது வலைத்தளங்கள் அல்லது சமூக ஊடக பக்கங்களில் ஏதேனும் ஒன்றைப் பார்வையிடவும்.
  • எமது ஏதேனும் வளாகத்திற்கு நீங்கள் பிரவேசிக்கும்போது
  • வெளி நிறுவனங்களிலிருந்து (கடன் குறிப்பு முகவர்கள்இ பரிசோதனை அல்லது விசாரணை முகவர்கள் போன்றவை).
  • எமது உள்ளக தரவு தளத்திலிருந்து , எமது நிறுவனங்கள், எமது துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்கள் வரையான உங்கள் தொடர்பு
  • எமது கண்காணிப்பு கெமரா (சிசிடிவி) கட்டமைப்பிலிருந்து
  1. விருந்தினர்களுக்கு (எமது எந்வொரு வளாகம் / அலுவலகம் / ஒன்லைன் தளங்களுக்கு)
  • எமது பார்வையாளர் பதிவு புத்தகம் அல்லது பார்வையாளர் நுழைவு படிவத்தை நீங்கள் பூர்த்தி செய்யும்போது.
  • உங்கள் அடையாள ஆவணம் (களை) எங்களுக்கு வழங்கும்போது.
  • நீங்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளும்போது (குறுந்தகவல், தொலைபேசி அழைப்புகள், பிற டிஜிட்டல் செனல்கள், மின்னஞ்சல்கள், தொடர் வினாக்கள், ஆய்வுகள் போன்றவை).
  • எமது கண்காணிப்பு கெமரா (சிசிடிவி) கட்டமைப்பிலிருந்து
  1. வேலைவாய்ப்பு தேடுவோர் மற்றும் பணியாளர்களுக்கு
  • நீங்கள் எம்மிடம் விண்ணப்பிக்கும்போது
  • நீங்கள் எங்களுடன் தொடர்பு கொள்ளும்போது (குறுந்தகவல், தொலைபேசி அழைப்புகள், பிற டிஜிட்டல் செனல்கள், மின்னஞ்சல்கள், தொடர் வினாக்கள், ஆய்வுகள் போன்றவை).
  • வெளி நிறுவனங்களிலிருந்து (கடன் குறிப்பு முகவர்கள்இ பரிசோதனை அல்லது விசாரணை முகவர்கள் போன்றவை).
  • எமது ஏதேனும் வளாகத்திற்கு நீங்கள் பிரவேசிக்கும்போது
  • உங்களை பரிந்துரை செய்பவர்
  • நீங்கள் முன்பு பணிபுரிந்த முதலாளி (கள்)
  • உங்களுடன் வியாபார தொடர்பு கொணட அல்லது கொண்டிருந்தவர்கள்
  • உங்களை அல்லது எங்களை ஆட்சேர்ப்பு செய்தவர்கள், ஆட்சேர்ப்பு நிறுவனம் அல்லது ஆட்சேர்ப்பு வலைத்தளம் / தளத்திலிருந்து.
  • உங்கள் வைத்திய மற்றும் உடல் ஆலோசகரிடமிருந்து (மருத்துவர் அல்லது பல் மருத்துவர் போன்றோர்)
  • எமது உள்ளக தரவு தளத்திலிருந்து , எமது நிறுவனங்கள், எமது துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்கள் வரையான உங்கள் தொடர்பு
  • எமது கண்காணிப்பு கெமரா (சிசிடிவி) கட்டமைப்பிலிருந்து

உங்கள் தனிப்பட்ட தரவுகளை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம்?

உங்கள் தனிப்பட்ட தரவு இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படலாம் அல்லது செயலாக்கப்படலாம்:

  1. வாடிக்கையாளர்களுக்கு
  • நீங்கள் ஒப்பந்தம் செய்துள்ள எமது உற்பத்திகள் மற்றும் / அல்லது சேவைகளை உங்களுக்கு வழங்குதல்.
  • எமது உற்பத்தி மற்றும் சேவைகளின் அம்சங்களில் ஏற்படும் நன்மைகள் மற்றும் மாற்றங்கள் குறித்து உங்களுக்கு அறிவித்தல்.
  • எமது அண்மைய சலுகைகள், பிரச்சாரங்கள் மற்றும் விளம்பரங்களை உங்களுக்கு வழங்குதல் (அத்தகைய மேம்படுத்தல்கள் உங்களுக்கு உதவும்)
  • கணக்கு பதிவு அல்லது பங்களிப்பு தொடர்பாக எங்கள் சேவை செய்திi உங்களுக்கு அனுப்பப்படும்
  • சட்ட, ஒப்பந்த மற்றும் / அல்லது ஒழுங்குமுறை செயற்பாடுகளுக்கு இணங்குதல் மற்றும் எமது சட்ட, ஒப்பந்த மற்றும் / அல்லது ஒழுங்குமுறை உரிமைகள் மற்றும் தீர்வுகளைப் பாதுகாத்தல் அல்லது செயற்படுத்துதல்
  • நீங்கள் ஆர்வம் கொண்டுள்ளதாக நாம் நினைக்கும் எமது நிறுவனம், துணை நிறுவனம், பங்காளர்கள் / துணை நிறுவனங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாம் தரப்பினர் ஊடாக விநியோகிக்கப்படும் உற்பத்தி மற்றும் சேவைகள் தொடர்பான தொலைபேசி அழைப்புகக்கள், குறுந்தகவல்கள், வேறு டிஜிட்டல் செனல்கள், மின்னஞ்சல் உட்பட சமூக ஊடகம் மூலம் உங்களுக்கு தகவல்களை வழங்குதல்
  • (இதுபோன்ற செய்திகளிலிருந்து நீங்கள் குழு விலகலாம்)
  • கடன் மீளப்பெறுதலை நிர்வகித்தல்.
  • தேவைப்படும்போது உங்கள் அடையாளத்தைச் சரிபார்த்தல் (உதாரணமாக உங்கள் கடவுச்சொல் அல்லது பாதுகாப்புத் தகவல் அங்கீகரிக்கப்படாத அணுகலிலிருந்து பாதுகாக்க மற்ற தனிப்பட்ட தரவுகளுக்காக நாங்கள் கோர வேண்டியிருக்கலாம்).
  • எங்கள் தயாரிப்புகள் மற்றும் / அல்லது சேவைகளின் பயன்பாடு (உங்கள் சேவை விருப்பங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலம்) மற்றும் பொருட்கள் மற்றும்ஃஅல்லது சேவை மேம்பாடுகள் அடிப்படையில் சந்தை மற்றும் தயாரிப்பு பகுப்பாய்வை மேற்கொள்ளுதல்.
  • பிற சட்ட நோக்கங்கள்
  1. பங்குதாரர்களுக்கு
  • உங்கள் அடையாளத்தை சரிபார்க்க
  • உங்கள் பங்கு உரிமைக்கு அமைய உங்கள் தொடர் தகவல்கள் மற்றும் பெயரிடும் விவரங்கள் மேம்படுத்தல், பங்கு உரிமை, சான்றிதழ் பிரதி விநியோகித்தல் அல்லது பங்குச் சான்றிதழ்களை மாற்றியமைத்தல், பங்கு பரிமாற்றங்களைப் பதிவு செய்தல் அல்லது பங்கு பரிமாற்றங்கள், ஈவுத்தொகை வழங்குதல், நியமன அறிவிப்புகளைப் பதிவு செய்தல் போன்றவை.
  • சட்ட, ஒப்பந்த மற்றும் / அல்லது ஒழுங்குமுறை செயற்பாடுகளுக்கு இணங்குதல் மற்றும் எமது சட்ட, ஒப்பந்த மற்றும் / அல்லது ஒழுங்குமுறை உரிமைகள் மற்றும் தீர்வுகளைப் பாதுகாத்தல் அல்லது செயற்படுத்துதல்
  • பிற சட்ட நோக்கங்கள்
  1. வியாபார பங்காளர்கள் மற்றும் சப்ளையர்களுக்கு
  • வியாபார செயல்படுத்தல்
  • வியாபாரத்தின் அமைப்பு மற்றும் முகாமைத்துவம்
  • சுகாதாரம்,பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம்
  • சட்ட, ஒப்பந்த மற்றும் / அல்லது ஒழுங்குமுறை செயற்பாடுகளுக்கு இணங்குதல் மற்றும் எமது சட்ட, ஒப்பந்த மற்றும் / அல்லது ஒழுங்குமுறை உரிமைகள் மற்றும் தீர்வுகளைப் பாதுகாத்தல் அல்லது செயற்படுத்துதல்
  • பிற சட்ட நோக்கங்கள்
  1. விருந்தினர்களுக்கு (எமது எந்வொரு வளாகம் / அலுவலகம் / ஒன்லைன் தளங்களுக்கு)
  • சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் உத்தரவாதம்
  • சட்ட, ஒப்பந்த மற்றும் / அல்லது ஒழுங்குமுறை செயற்பாடுகளுக்கு இணங்குதல் மற்றும் எமது சட்ட, ஒப்பந்த மற்றும் / அல்லது ஒழுங்குமுறை உரிமைகள் மற்றும் தீர்வுகளைப் பாதுகாத்தல் அல்லது செயற்படுத்துதல்
  • பிற சட்ட நோக்கங்கள்
  1. வேலைவாய்ப்பை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு
  • ஆட்சேர்ப்பு மற்றும் பணியமர்த்தல் தொடர்பாக பதிவுகளை வைத்திருத்தல்
  • பின்புல சோதனைகளை நடத்துதல்
  • சட்ட, ஒப்பந்த மற்றும் / அல்லது ஒழுங்குமுறை செயற்பாடுகளுக்கு இணங்குதல் மற்றும் எமது சட்ட, ஒப்பந்த மற்றும் / அல்லது ஒழுங்குமுறை உரிமைகள் மற்றும் தீர்வுகளைப் பாதுகாத்தல் அல்லது செயற்படுத்துதல்
  • ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் உடல்நலம் அல்லது பாதுகாப்பு ஆபத்தில் இருக்கும் அவசரகால சூழ்நிலைகளில் உங்களால் குறிப்பிடப்பட்டிருக்கும் நபரை தொடர்புகொள்வது
  • பிற சட்ட நோக்கங்கள்
  1. ஊழியர்களுக்காக (மேலே உள்ள வேலைவாய்ப்பு தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களுக்கு மேலதிகமாக)
  • தொழில் முன்னேற்றம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி.
  • சம்பள மற்றும் வேலைவாய்ப்பு சலுகைகளின் நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம்
  • குறுகிய கால மற்றும் நீண்ட கால ஊக்கத் திட்டங்கள்.
  • வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறை உறவு சர்ச்சைகள், வழக்குகள் உட்பட ஆனால் அவற்றுக்கு மட்டும் மட்டுப்படாமல்.
  • எமது நிறுவனம், துணை நிறுவனங்கள் அல்லது துணை நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் நிறுவன பயிற்சிகள்.
  • முகாமைத்துவ செயற்திறன்
  • வேலை மற்றும் பயண அனுமதி மற்றும் குடிவரவு / குடியகல்வு விண்ணப்பம்
  • கடன்கள், காப்புறுதி மற்றும் மருத்துவ நோக்கங்கள்
  • ஒழுக்காற்று நடவடிக்கைகள் அல்லது முடித்தல்
  • ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல்
  • கணக்கியல், நிதி அறிக்கை மற்றும் வியாபாரத்தை திட்டமிடல்.
  • பாதுகாப்பு கண்காணிப்பு.
  • குழு செயற்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் பிற வியாபாரம் தொடர்பான நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல்.
  • உள்ளக அல்லது வெளிப்புற விசாரணைகள்
  • ஆராய்ச்சி, சம்பள ஆய்வுகள் மற்றும் தணிக்கை நோக்கத்திற்கானது
  • எங்களுடன் நீங்கள் மேற்கொண்டுள்ள வேலை ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள காரணங்களுடனான இணக்கம்.
  • எந்தவொரு சட்டம் அல்லது ஒழுங்குமுறை வேண்டுகோள் அல்லது கோரிக்கை.
  • பிற சட்ட நோக்கங்கள்

உங்கள் தனிப்பட்ட தரவுகளை நாம் யாருக்குத் தெரியப்படுத்துகிறோம்?

உங்கள் தனிப்பட்ட தரவுகளை நாம் வெளிப்படுத்தலாம்:

  1. வாடிக்கையாளர்களுக்கு
  • எமது குழும நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் மற்றும் இணைந்த / துணை நிறுவனங்கள்.
  • சர்வதேச அழைப்புகளை ஏற்படுத்தும்போது ஏனைய வசதிளை வுழங்குபவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள்
  • எங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவும், உங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், மோசடியை விசாரிக்க அல்லது சட்டத்தை நடைமுறைப்படுத்தும் கோரிக்கைக்குப் பதிலளிக்கவும் மூன்றாம் தரப்பினருக்குத் தேவைப்படும்போது அல்லது நியாயமானதாக இருக்கும்போது.
  • எமக்காக அல்லது எமது ஆலோசனைகளுக்கமைய சேவை வழங்குனர்கள், துறையின் பொறியியலாளர்கள், ஒப்பந்தார்கள் ஒப்பந்தக்காரர்கள்இ துணை ஒப்பந்ததாரர்கள் அல்லது எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும்
  • உரிய சட்டம் ஊடாக எமக்கான அனுமதி வழங்கப்பட்ட சட்டங்கள் அல்லது பிணைப்பிற்கு உள்ளடங்கும் எந்தவொரு அரச அதிகார சபைக்ககும், அஅரச ஒழுங்குபடுத்தும் அல்லது நிதி நிறுனத்திற்கு
  • நீங்கள் ஒப்புக்கொண்ட / விலகாத எமது சந்தைப்படுத்த் நடவடிக்கைகளுக்காக எமது வியாபார பங்காளர்கள்
  • கடன் பரிசோதனை மற்றும் மோசடி நிர்வாகம் மூன்றாம் தரப்பினருக்கு.
  • தேவைப்படும் போது, ​​உங்கள் தகவலைச் சரிபார்ப்பது உட்பட, எங்கள் கட்டணச் செனல்களாக செயல்படும் எந்தவொரு தரப்பினருக்கும்.
  • எமது தயாரிப்புகள் மற்றும்/ அல்லது சேவைகளை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள பகுப்பாய்வுகளை மேற்கொள்ள மூன்றாம் தரப்பினருக்கு.
  • ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நோக்கங்களுக்காக மூன்றாம் தரப்பினருக்கு
  • எமது வியாபாரிகள் அல்லது முகவர்களுக்கு
  • நாம் விற்பனை அல்லது வியாபார பரிவர்த்தனையில் ஈடுபட்டிருந்தால் (உதா: இணைப்பு அல்லது கையகப்படுத்துதல்), ஏதேனும் மறுசீரமைப்பு, இணைப்பு, விற்பனை, கூட்டு முயற்சி, ஒதுக்கீடு போன்றவற்றில் உங்கள் தனிப்பட்ட தரவை மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்படுத்தவோ அல்லது மாற்றவோ நாங்கள் சட்டப்பூர்வமான உரிமையை வைத்துள்ளோம். எமது வியாபாரம், சொத்துக்கள் அல்லது பங்குகளின் அனைத்து அல்லது எந்தப் பகுதியையும் மாற்றுவது அல்லது வேறு இடமாற்றம் செய்தல் (ஏதேனும் திவால்நிலை அல்லது அதுபோன்ற நடவடிக்கைகள் உட்பட). அத்தகைய மூன்றாம் தரப்பினர், எடுத்துக்காட்டாக, ஒரு கையகப்படுத்தல் அல்லது இலக்கு நிறுவனம் மற்றும் அதன் ஆலோசகர்களை உள்ளடக்கியிருக்கலாம்.
  • நோக்கங்களுக்காக மூன்றாம் தரப்பினருக்கு ‘உங்கள் தனிப்பட்ட தரவுகளை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம்?’என்பதன் கீழ் தரப்பட்டுள்ளது.
  1. பங்குதாரர்களுக்கு
  • எமது குழும நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் மற்றும் இணைந்த / துணை நிறுவனங்கள்.
  • உரிய சட்டம் ஊடாக எமக்கான அனுமதி வழங்கப்பட்ட சட்டங்கள் அல்லது பிணைப்பிற்கு உள்ளடங்கும் எந்தவொரு அரச அதிகார சபைக்ககும், அஅரச ஒழுங்குபடுத்தும் அல்லது நிதி நிறுனத்திற்கு
  • இலாபப் பங்குகளை விநியோகிக்கும் நோக்கம் வங்கிகளுக்கு.

  • எங்கள் மூன்றாம் தரப்பு முகவர்கள், சேவை வழங்குநர்கள், ஆலோசகர்கள், ஒப்பந்தக்காரர்கள் மற்றும் / அல்லது துணை ஒப்பந்தக்காரர்களுக்கு.
  • உரிய சட்டம் ஊடாக எமக்கான அனுமதி வழங்கப்பட்ட சட்டங்கள் அல்லது பிணைப்பிற்கு உள்ளடங்கும் எந்தவொரு அரச அதிகார சபைக்ககும், அஅரச ஒழுங்குபடுத்தும் அல்லது நிதி நிறுனத்திற்கு
  • நாம் விற்பனை அல்லது வியாபார பரிவர்த்தனையில் ஈடுபட்டிருந்தால் (உதா: இணைப்பு அல்லது கையகப்படுத்துதல்), ஏதேனும் மறுசீரமைப்பு, இணைப்பு, விற்பனை, கூட்டு முயற்சி, ஒதுக்கீடு போன்றவற்றில் உங்கள் தனிப்பட்ட தரவை மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்படுத்தவோ அல்லது மாற்றவோ நாங்கள் சட்டப்பூர்வமான உரிமையை வைத்துள்ளோம். எமது வியாபாரம், சொத்துக்கள் அல்லது பங்குகளின் அனைத்து அல்லது எந்தப் பகுதியையும் மாற்றுவது அல்லது வேறு இடமாற்றம் செய்தல் (ஏதேனும் திவால்நிலை அல்லது அதுபோன்ற நடவடிக்கைகள் உட்பட). அத்தகைய மூன்றாம் தரப்பினர், எடுத்துக்காட்டாக, ஒரு கையகப்படுத்தல் அல்லது இலக்கு நிறுவனம் மற்றும் அதன் ஆலோசகர்களை உள்ளடக்கியிருக்கலாம்.
  • நோக்கங்களுக்காக மூன்றாம் தரப்பினருக்கு ‘உங்கள் தனிப்பட்ட தரவுகளை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம்?’என்பதன் கீழ் தரப்பட்டுள்ளது.
  1. பார்வையாளர்களுக்கு (எமது எந்தவொரு வளாகத்திற்கு / அலுவகலத்திற்கு / ஒன்லைன் தளங்களுக்கு)

உங்கள் தனிப்பட்ட தரவுகளை நாங்கள் எந்த வெளிப்புற நிறுவனங்களுடனோ அல்லது மூன்றாம் தரப்பினருடனோ பகிர்ந்து கொள்ளவோ அல்லது பரிமாறவோ மாட்டோம். எவ்வாறாயினும், நாம் உங்கள் தனிப்பட்ட தரவை எங்கு, எப்போது பகிருகின்றோம் அல்லது இடமாற்றம் செய்கிறோம், அது ‘உங்கள் தனிப்பட்ட தரவை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம்?’ இந்த தனியுரிமை அறிவிப்பின் படியே நாம் அவ்வாறு செய்வோம்.

குறித்த சட்டத்திற்கு நாம் அடிபணிகின்ற அல்லது அனுமதி வழங்கப்பட்ட பொறுப்பிற்கு அமைய சட்டத்திற்கு அல்லது ஒழுங்குமுறைக்கு அமைய எந்தவொரு அரச அதிகார சபைக்கோ, அரசு, ஒழுங்குபடுத்தும் அல்லது நிதி நிறுவனத்திற்கு தேவையாயின் நாம் உங்கள் தனிப்பட்ட தரவுகளை வெளியிடுவோம்.

  1. வேலைவாய்ப்பு எதிர்பார்ப்பாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு
  • எமது குழும நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் மற்றும் இணைந்த / துணை நிறுவனங்கள்.
  • பின்னணி விபரங்களை உறுதிப்படுத்துபவர்களுக்காக
  • உரிய சட்டம் ஊடாக எமக்கான அனுமதி வழங்கப்பட்ட சட்டங்கள் அல்லது பிணைப்பிற்கு உள்ளடங்கும் எந்தவொரு அரச அதிகார சபைக்ககும், அஅரச ஒழுங்குபடுத்தும் அல்லது நிதி நிறுனத்திற்கு
  • “நிர்வாகம் அல்லது பிற சேவைகளை வழங்கும் வேறு எந்த மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கும்
  • எங்களால் அல்லது எங்கள் நிறுவனத்தால் , குழும நிறுவனங்கள், துணை நிறுவனங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் எந்தவொரு பெருநிறுவன பயிற்சிகளிலும் ஈடுபட்டுள்ள மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு.
  • நாம் விற்பனை அல்லது வியாபார பரிவர்த்தனையில் ஈடுபட்டிருந்தால் (உதா: இணைப்பு அல்லது கையகப்படுத்துதல்), ஏதேனும் மறுசீரமைப்பு, இணைப்பு, விற்பனை, கூட்டு முயற்சி, ஒதுக்கீடு போன்றவற்றில் உங்கள் தனிப்பட்ட தரவை மூன்றாம் தரப்பினருக்கு வெளிப்படுத்தவோ அல்லது மாற்றவோ நாங்கள் சட்டப்பூர்வமான உரிமையை வைத்துள்ளோம். எமது வியாபாரம், சொத்துக்கள் அல்லது பங்குகளின் அனைத்து அல்லது எந்தப் பகுதியையும் மாற்றுவது அல்லது வேறு இடமாற்றம் செய்தல் (ஏதேனும் திவால்நிலை அல்லது அதுபோன்ற நடவடிக்கைகள் உட்பட). அத்தகைய மூன்றாம் தரப்பினர், எடுத்துக்காட்டாக, ஒரு கையகப்படுத்தல் அல்லது இலக்கு நிறுவனம் மற்றும் அதன் ஆலோசகர்களை உள்ளடக்கியிருக்கலாம்.
  • நோக்கங்களுக்காக மூன்றாம் தரப்பினருக்கு ‘உங்கள் தனிப்பட்ட தரவுகளை நாங்கள் எவ்வாறு பயன்படுத்துகிறோம்?’என்பதன் கீழ் தரப்பட்டுள்ளது.

உங்கள் தனிப்பட்ட தரவின் இரகசியத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் பராமரிப்பதை உறுதி செய்வதற்காக சிறந்த நடைமுறைகளுக்கேற்பவே நாம் முயற்சி செய்கின்றோம். மேலும் உங்கள் தனிப்பட்ட தரவை எந்த அங்கீகாரமற்ற நோக்கத்திற்கும் பயன்படுத்த மாட்டோம்.

மேற்கூறியவற்றைத் தவிர, எங்கள் சேவை வழங்குநர்கள் உங்களுக்கு தயாரிப்புகள் மற்றும் /அல்லது சேவைகளை வழங்கும் போது, ​​உங்கள் தனிப்பட்ட தரவை மற்ற சேனல்கள் வழியாக நீங்கள் அவர்களின் தனிப்பட்ட வலைத்தளங்கள் / மொபைல் அப்ளிகேஷன்கள் ஊடாக சேகரிக்கலாம்.

இதுபோன்ற ஒவ்வொரு சேவை வழங்குநரின் இரகசியத்தன்மை தொடர்பான கொள்கைகளை மதிப்பாய்வு செய்யுமாறு நாம் உங்களை எச்சரிக்கின்றோம்.

சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச அளவிற்கு எந்தவொரு சேவை வழங்குநரின் உள்ளடக்கம், தனியுரிமை அறிவிப்புகள் அல்லது நடைமுறைகளுக்கு எங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.

தனிப்பட்ட தரவு பரிமாற்றங்கள்

உங்கள் தனிப்பட்ட தரவை புவியியல் எல்லைகள் வழியாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்ற முடியும். உங்கள் தனிப்பட்ட தரவு எங்கள் நிறுவனங்களின் குழுக்கள், துணை நிறுவனங்கள், பங்காளிகள் ஃதுணை நிறுவனங்கள் மற்றும்ஃஅல்லது இலங்கைக்கு வெளியே அமைந்துள்ள மூன்றாம் தரப்பினருக்கு மாற்றப்பட்டால், உங்கள் தனிப்பட்ட தரவு பரிமாற்றம் நிறுவன, ஒப்பந்த மற்றும் சட்ட நடவடிக்கைகளின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. உங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதற்காக இந்தத் தரவைப் பெறும் தரப்பினருக்கு நியாயமான போதுமான அளவிலான பாதுகாப்பு மற்றும் கூடுதல் உள்ளுர் ரீதியான சட்டத் தேவைகள் வழங்கப்படும்.

உங்கள் தனிப்பட்ட தரவுகளை களஞ்சியப்படுத்தி வைப்பது எவ்வாறு?

தேவையைப் பொறுத்து, உங்கள் தனிப்பட்ட தரவை எலக்ட்ரானிக் அல்லது விண்ணப்ப வடிவத்தில் சேகரித்து வைக்கலாம். இத்தகைய தனிப்பட்ட தரவு ஐடி சிஸ்டம்ஸ் (உதா: வெளிப்புற க்ளைவுட் சேமிப்பு, உள் அல்லது மூன்றாம் தரப்பு மேலாண்மை அமைப்புகள், மின்னஞ்சல்கள், தரவுத்தளங்கள், ஹார்ட் டிரைவ்கள் போன்றவை) மற்றும் மூன்றாம் தரப்பு வளாகங்களில் சேமிக்கலாம்.

அனுமதியின்றி தனிப்பட்ட தரவை தயாரித்தல், தற்செயலாக வெளிப்படுத்தல், வெளிப்பாடுஇ இழப்பு அல்லது அழித்தல் அல்லது சேதப்படுத்துதல் போன்ற தனிப்பட்ட தரவுகளைத் தடுப்பதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தரவை பாதுகாப்பான சூழலில் செயலாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். உங்கள் தனிப்பட்ட தரவு மற்றும் எங்கள் வலையமைப்பு அங்கீகார அணுகலில் இருந்து பாதுகாக்க பல்வேறு தொழில்நுட்ப மற்றும் நிர்வாக பாதுகாப்பு நடவடிக்கைகளை நாங்கள் செயல்படுத்தியுள்ளோம். இந்த நடவடிக்கைகளில் சில:

  • தனிப்பட்ட தரவுகளின் குறியாக்கம்;
  • தனியுரிமை மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடித்தல்;
  • அடிக்கடி பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் எமது பாவனைகளை மேம்படுத்தலுக்கான மதிப்பீடுகள் மற்றும்
  • அத்தகைய தனிப்பட்ட தரவுகளை அறிந்துகொள்ள வேண்டிய பயனாளர்களுக்கு அத்தகைய தனிப்பட்ட தரவை அணுகுவதற்கான கட்டுப்பாடு.

உங்கள் தனிப்பட்ட தரவின் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம். ஆனால் இணையத்தில் எந்த பரிமாற்ற முறையும், செயலாக்கத்தின் போது பாதுகாக்கும் முறையும் அல்லது மின்னணு சேமிப்பு முறையும் 100% பாதுகாப்பற்றது என்பதை நினைவில் கொள்ளவும். உங்கள் தனிப்பட்ட தரவைப் பாதுகாக்க வணிக ரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடிய வழிமுறைகளைப் பயன்படுத்த நாங்கள் முயலும்போது, ​​அதன் முழுமையான பாதுகாப்பிற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது.

உங்கள் தனிப்பட்ட தரவுளை எவ்வளவு காலம் நாங்கள் வைத்திருப்போம்?

நாம் உங்கள் தனிப்பட்ட தரவுகளை வைத்திருப்பது, அந்த தரவுகள் சேகரிக்கப்பட்ட நோக்கங்களுக்காக தேவைப்படும் வரை மட்டுமே. தனிப்பட்ட தரவுகளுக்கான தக்கவைப்பு காலம் பொருந்தும் சட்டங்களின் தேவைகள் அல்லது முறையான வணிகத் தேவைகளால் பாதிக்கப்படலாம். எல்லா சந்தர்ப்பங்களிலும், அத்தகைய தனிப்பட்ட தரவு நீண்ட காலத்திற்கு வைக்கப்படலாம். அங்கு அவ்வாறு செய்ய சட்ட அல்லது ஒழுங்குமுறை காரணம் உள்ளது (சட்டப்பூர்வ அல்லது ஒழுங்குமுறை நோக்கத்திற்காக தேவைப்படாதபட்சத்தில் அது நீக்கப்படும்).

தனிப்பட்ட தரவு அதன் தக்கவைப்பு காலத்தை தாண்டியதும், அத்தகைய தனிப்பட்ட தரவை தக்கவைத்துக்கொள்ள சரியான காரணம் இல்லை என்றால், தனிப்பட்ட தரவு பாதுகாப்பாக அகற்றப்படும்.

உங்கள் உரிமைகள் என்ன?

உங்கள் தனிப்பட்ட தரவுகள் துல்லியமானவை மற்றும் புதுப்பித்தவை என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பதன் மூலம் உங்கள் உரிமைகள் மற்றும் தனியுரிமையை நாங்கள் போற்றுவோம். எங்கள் கவனத்திற்கு கொண்டு வரப்படும் எந்தத் தவறான தகவலும், கீழே குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு வழிமுறைகள் மூலம் எங்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு எழுத்துப்பூர்வ அறிவிப்பு கிடைக்கப் பெற்ற ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் ஏதேனும் கோரப்பட்ட திருத்தங்கள் பொருந்தும் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இருக்கலாம்.

எங்களிடம் அல்லது எமது கட்டுப்பாட்டின் கீழுள்ள தனிப்பட்ட தரவுகளை நியாயமான விலையில் உரிய காலத்திற்குள் (முடிந்தவரை) பெற்றுக்கொள்ளலாம்.

கீழே குறிப்பிட்டுள்ள தொடர்பு விவரங்கள் மூலம் எங்களைத் தொடர்புகொள்வதன் மூலம் எங்கள் அறிவிப்புகள் உங்களை வந்தடைவதை நிறுத்துமாறு நீங்கள் எங்களிடம் கோரலாம். எங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளுக்கான சந்தாவை நீங்கள் இரத்து செய்யாவிட்டால், குறிப்பிட்ட டயலொக் பினான்ஸ் தயாரிப்புகள் அல்லது சேவைகளின் ஒரு பகுதியாகக் கருதப்படும் கட்டாய தயாரிப்பு அல்லது சேவை தகவல் தொடர்புக்கு இந்த தேர்வுகள் பொருந்தாது.

உங்கள் தனிப்பட்ட தரவுகளை வழங்காமைக்கான காரணிகள்

உங்களைப் பற்றிய சில தனிப்பட்ட தரவுகளின் சேகரிப்பு மற்றும் அத்தகைய தகவல்களை வழங்கத் தவறினால் அவை எங்களுக்கு தேவைப்படலாம்:

  • இதன் பெறுபேறாக உங்கள் விண்ணப்பத்தை செயலாக்க முடியவில்லை மற்றும் / அல்லது எங்கள் உற்பத்தி மற்றும் / அல்லது சேவைகளை உங்களுக்கு வழங்க முடியாதுள்ளது
  • எமது உற்பத்திகள் மற்றும் / அல்லது சேவைகளில் உங்கள் கோரிக்கைகளுக்கு எங்களால் பதிலளிக்க முடியாமல் போனதன் விளைவு.
  • எமது இணையத்தளம், இணைய இணைப்புகள் அல்லது டிஜிட்டல் தளங்களில் சில அம்சங்களுக்கான அணுகல்களுக்கு வரம்பு விதிக்கவும் அல்லது தடுப்பதற்கும்
  • அதன் பெறுபேறாக எமது சேவைகள் / உற்பத்திகள் அல்லது தொடர்புடைய புது மேம்படுத்தல்கள் பிரசாங்கள் தொடர்பாக உங்களை அறிவுறுத்தாமை
  • எம்மால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரச்சார நடவடிக்கைகளுக்கான அழைப்பிதழ்களைப் பெற முடியாமல் போனமைக்கான காரணம்
  • உங்களுடன் தொடர்புகொள்வதற்கான எங்கள் திறனை இது எதிர்மறையாக பாதிக்கிறது.
  • அதன் பெறுபேறாக பங்கு தொடர்பான உங்கள் கோரிக்கைகளை எங்களால் செயல்படுத்த முடியவில்லை.
  • இதன் விளைவாக, பங்குதாரர் சந்திப்புகள் மற்றும் உங்கள் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக ஈவுத்தொகையை அனுப்ப முடியாது போகலாம்
  • உங்களுடனோ அல்லது எதிர்தரப்பினருடனோ உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ள முடியாமை, உங்களுடன் எதிர்தரப்பினர் ஏற்படுத்திக்கொண்டுள்ள ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்ல முடியாமல் போகல்
  • உங்களுக்கு கிடைக்கவுள்ள வேலை அல்லது உள்ளக பயற்சிக்காக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான உங்கள் வாய்ப்புகளை எதிர்மறையாக பாதிக்கும்.
  • அத்தகைய தனிப்பட்ட தரவை நாங்கள் சேகரிக்க வேண்டிய பொருந்தக்கூடிய சட்டம் அல்லது ஒழுங்குமுறையை மீறுவதாக இருத்தல்

எங்களுக்கு தனிப்பட்ட தரவுகளை சமர்ப்பிப்பதன் ஊடாக நீங்கள் ஏற்றுக்கொள்வது யாதெனின்,

  • இந்த தனியுரிமை அறிவிப்பை நீங்கள் வாசித்து புரிந்துகொண்டீர்கள் மற்றும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளபடி தனிப்பட்ட தரவின் பயன்பாடு, செயலாக்கம், வெளிப்படுத்தல் மற்றும் பரிமாற்றத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளீர்கள்.
  • உங்களால் வழங்கப்பட்ட அனைத்து தகவல்களும் பிரதிநிதித்துவங்களும் உங்கள் அறிவுக்கு எட்டிய வரையில் உண்மை மற்றும் சரியானவை. மேலும் நீங்கள் தெரிந்தே எந்தத் தகவலையும் தவிர்க்கவில்லை.

மேலதிக தகவல்களுக்கு நீங்கள் யாரை தொடர்பு கொள்ள முடியும

இந்த அறிவிப்பு குறித்து அல்லது எமது தனிப்பட்ட தகவல்களை கையாளுதல் நடைமுறைகள் பற்றி ஏதேனும் கேள்விகள் அல்லது புகார்கள் இருந்தால்இ எங்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் உங்களுக்கு கிடைக்கப்பெறும் எங்கள் தொடர்பு செனல்கள் மூலம் தயவுசெய்து எங்களை தொடர்புகொள்ளவும்

இந்த தனியுரிமை அறிவிப்பைத் திருத்த, மாற்றியமைக்க, அல்லது புதுப்பிக்கும் உரிமையை நாங்கள் அவ்வப்போது எங்கள் விருப்பப்படிஇ தேவை ஏற்படும் போது செய்வோம். சமீபத்தில் வெளியிடப்பட்ட தனியுரிமை அறிவிப்பு அதன் முந்தைய பதிப்புகளில் ஏதேனும் ஒன்றில் மேலோங்கி இருக்கும் மற்றும் பதிப்பு இலக்கம் மற்றும் திகதி அதற்கேற்ப புதுப்பிக்கப்படும். எந்தவொரு மாறுபாடுகளையும் உங்களுக்குத் தெரிவிக்க எங்களுக்கு எந்தக் கடமையும் இல்லை. இந்த தனியுரிமை அறிவிப்பை அவ்வப்போது சரிபார்க்க வேண்டியது உங்கள் பொறுப்பாகும்.

We would like
to hear from you
genie செயலியை பெற்றுக்கொள்ளுங்கள் genie

genie செயலியை இன்றே பெற்றுக்கொண்டு உங்கள் நிதி சார்ந்த எதிர்காலத்தை கட்டுப்படுத்துங்கள்