டயலொக் பினான்ஸின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக நசீம் நியமிக்கப்பட்டுள்ளார்

Feb 08, 2021

டயலொக் பினான்ஸ் பிஎல்சியின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக நசீம் மொஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். அங்கா பிரியதர்ஷன தனது பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்தே இவர் 2018 ஏப்ரலில் பதவியேற்றார்.

வியாபார மேம்பாடு மற்றும் மறுமலர்ச்சி, வியாபார மூலோபாயம், விநியோகம், கூட்டுறவு மற்றும் நிதி உற்பத்தி ஆகியவற்றில் 25 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட சிரேஷ்ட முகாமைத்துவ அனுபவத்தை கொண்டவரே நசீம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவருக்கு வங்கி, நிதிச் சேவைகள், புதிய வியாபாரங்கள் மற்றும் நிதி தொழில்நுட்பத்துறை தொடர்பான பாரிய அனுபவம் உள்ளது.
நசீம், நேஷனல்ஸ் டிரஸ்ட் வங்கியில் இருந்து டயலொக் பினான்ஸில் சேர்ந்தார். அங்கு அவர் இலங்கையின் முதல் டிஜிட்டல் வங்கியான பிரீமி (FriMi) சிரேஷ்ட உப தலைவராக பொறுப்பேற்றார். அவர் UPay, உலகளாவிய கொடுப்பனவுகள் – இலங்கை மற்றும் மாலத்தீவுகள் மற்றும் HSBC இலங்கை மற்றும் மாலத்தீவின் ஆகியவற்றின் பிரதம நிறைவேற்று அதிகாரி ,பணிப்பாளர் / உள்ளுர் தலைவர் மற்றும் கார்ட் அட்டைகள் ஏற்றுக்கொள்ளும் பிரிவின் தலைவர் பதவியையும் வகித்தார்.

நசீம், ஐக்கிய இராச்சியத்தின் கார்டிஃப் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றுள்ளார்.

We would like
to hear from you
genie செயலியை பெற்றுக்கொள்ளுங்கள் genie

genie செயலியை இன்றே பெற்றுக்கொண்டு உங்கள் நிதி சார்ந்த எதிர்காலத்தை கட்டுப்படுத்துங்கள்