
நிறுவனம்
உங்களுக்காக
உங்கள் வியாபாரத்திற்காக
டயலொக் பினான்ஸ் பிஎல்சியின் தலைவராக மூத்த வங்கியாளர் ரேணுகா பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
பதவி விலகிய கலாநிதி. ஹான்ஸ் விஜயசூரிய அவர்களுக்கு பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார். ரேணுகா தற்போது டயலொக் ஆசியாட்டா பிஎல்சி (டயலொக்)இன் குழும பிரதான டிஜிட்டல் சேவைகள் அதிகாரியாக பணியாற்றுகிறார். வங்கியியல் துறையில் 39 வருடங்கள் விரிவான தொழில் அனுபவம் கொண்டவரும் பரந்த நிபுணத்துவமும் கொண்டவர். மிகவும் அனுபவம் வாய்ந்த, வெற்றிகரமான மற்றும் நன்கு கருதப்பட்ட வியாபாரத் தலைவராகவும் உள்ளார். டிஜிட்டல் வங்கியியல் தொடர்பாக கவனம் செலுத்தி வங்கியை அபிவிருத்தி நோக்கி முன்னெடுத்து செல்லக் கூடியவர்.
2020 ஏப்ரல் மாதத்தில் டயலொக் நிறுவனத்தில் இணைய முன்னர் ரேணுகா, 2012 முதல் 2020 வரை நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கி பிஎல்சி (என்டிபி) பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றினார். நிறுவனத்தை இன்றைய சிறந்த நிலைக்கு கொண்டு வருவதில் அவரது பங்கு முக்கியமானது. அவர் நேஷன்ஸ் டிரஸ்ட் வங்கியுடன் கடமையாற்றிய காலத்தில் பிரதி நிறைவேற்று அதிகாரி, பிரதி பொது முகாமையாளர், நிறுவன நிதி தீர்வு உள்ளிட்ட சிரேஷ்ட தலைவரின் வகிபாகங்கள் பலவற்றை முன்னெடுத்தார். என்டிபி வங்கியில் செருவதற்கு முன்னர் ரேணுகா, இலங்கை ஏபிஎன் அம்ரோ வங்கியின் உப தலைவர், பூகோள கொடுக்கல் வாங்கல் சேவையின் தலைவர் மற்றும் வாடிக்கையாளர் வங்கியியலில் பிரதான பணிகளை முன்னெடுத்தார். அவர் இலங்கையின் பேங்க் இண்டோசுவேஸ் இன் நிறுவன வங்கியியல் முகாமையாளராகவும், ஹொங்கொங்கின் நெடர்லேண்ட்ஷே மிடன்ஸ்டாண்ட்ஸ் வங்கியிலும் பணியாற்றியுள்ளார்.
கூட்டுறவு துறையின் முக்கிய தலைமைப் பணிக்கு மேலதிமாக, ரேணுகா, அமெரிக்கன் வர்த்தக சபையின் துணைத் தலைவராகவும் உள்ளார். இதற்கு முன்னர் லங்கா கிளியர் லிமிடெட் பணிப்பாளராக மற்றும் இலங்கை வங்கியாளர் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்
ரேணுகா இங்கிலாந்தின் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் உதவியாளர் மற்றும் ஹாவாட் வணிக கல்லூரியின் முகாமைத்துவ பிரிவு திட்டத்தின் முன்னாள் உறுப்பினருமாவார்.
அண்மைய நியமனத்தை தொடர்ந்து, டயலொக் பினான்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர் சபையில் ரேணுகா பெர்னாண்டோ (தலைவர்), ஏ.பிரியதர்ஷன, டபிள்யூ.வி.எஸ்.டி. வீரசிங்க, ஏ.எஸ். அபேகோன், எல்.டி.ஆர். ஹெட்டியாரச்சி மற்றும் பி.பி. எதிரிசிங்க ஆகியோர் இடம்பெறுகின்றனர்.
Public Notice on Dialog Finance Kandy branch closure Oct 10, 2024
மேலும் வாசிக்கConcessions Issued by CBSL for Covid-19 Affected Businesses and Individuals
மேலும் வாசிக்கRights Issue – 2021
மேலும் வாசிக்கசாதாரண பொதுக்கூட்டம்
மேலும் வாசிக்க40th Annual General Meeting
மேலும் வாசிக்கgenie செயலியை இன்றே பெற்றுக்கொண்டு உங்கள் நிதி சார்ந்த எதிர்காலத்தை கட்டுப்படுத்துங்கள்