இலங்கையில் டயலொக் பினான்ஸ் உரிமைகள் விநியோகித்தல் ரூ .764 மில்லியன் திரட்ட எதிர்பார்ப்பு

Jan 10, 2019

ECONOMYNEXT – இலங்கையில் டயலொக் பினான்ஸ் மூலதனத்தை வலுப்படுத்தும் நோக்கில் ஒவ்வொன்றும் 40 ரூபாயில் பங்குகளின் உரிமைகள் வெளியீட்டின் மூலம் 764 மில்லியன் ரூபா திரட்ட முயல்கிறது.

தற்போதுள்ள ஒவ்வொரு 121 பங்குகளுக்கும் 32 புதிய பங்குகளின் விகித அடிப்படையில் 19 மில்லியன் சாதாரண வாக்குப் பங்குகளை வெளியிடுவதாக அது பங்குச் சந்தை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

முக்கிய மூலதனத்திற்கான, மத்திய வங்கியின் குறைந்தபட்சத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே உரிமைப் விநியோகத்தலின் நோக்கம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கையடக்க தொலைபேசி செயற்பாட்டாளரான டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் நிதி நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

(கொழும்பு / ஜனவரி 10/ 2019)

We would like
to hear from you
genie செயலியை பெற்றுக்கொள்ளுங்கள் genie

genie செயலியை இன்றே பெற்றுக்கொண்டு உங்கள் நிதி சார்ந்த எதிர்காலத்தை கட்டுப்படுத்துங்கள்